For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க திமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சை திமுக மாநாட்டில் விழா மலரை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட, பொதுச் செயலாளர் அன்பழகன் பெற்றுக்கொள்கிறார்.

தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தஞ்சை திமுக மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவின் தஞ்சை மண்டல மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காலையில் துரைமுருகன், பரிதிஇளம்வழுதி, கோ.சி.மணி உள்ளிட்ட பல தலைவர்களும் பேசினர். இரவு 8 மணியளவில் பொதுச் செயலாளர் அன்பழகன்நிறைவுரையாற்றினார்.

முன்னதாக விழா மலரை திமுக தலைர் கருணாநிதி வெளியிட அன்பழகன் அதைப் பெற்றுக் கொண்டார்.

மாலையில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்குறித்த விவரம்:

திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாட்டு வளமையும் பொருந்திய செம்மொழியாம்தமிழை, இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்.

இந்தி மொழி பேசாத மாநிலங்களில் , இந்தி மொழி மறைமுகமாக திணிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் நேரு கொடுத்தஉறுதிமொழியை மீறி இந்த இந்தித் திணிப்பு மத்தியஅரசு அலுவலகங்கள் மூலம் நடந்து வருகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி, இந்தியாவில் பேசப்படும் அனைத்து அட்டவணை மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிப்பதுமட்டும் தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

உண்மையான மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக சட்டசபையில் 1974ம் ஆண்டுநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி வழங்கியபடி, 2012ம் ஆண்டுக்குள் நிதிகளை இணைக்கும் பணிகளை மத்திய அரசுதொடங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

சிறுபான்மை இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைஇடைக்காலத் தீர்ப்புப்படி 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவிக்க மத்திய அரசு உதவ வேண்டும்.

கல்விக் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை மாதம் ஒரு முறை என்பதை மாற்றி 3 மாதங்களுக்கு ஒரு முறை என்று மாற்றி சட்டத் திருத்தம்கொண்டு வந்த தமிழக அரசுக்கு இம்மாநாடு கண்டனம் தெரிவிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X