For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு இ மெயில் மிரட்டல்: பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இ மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் மீது சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் கடந்த மாதம் இ மெயிலில் ஒரு கொலை மிரட்டல் வந்தது. ஜெயாடிவியின் இணையதள முகவரியில் இது அனுப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், இது தொடர்பாக சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைசேர்ந்த கலைவாணி (வயது 25) என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் அமிஞ்சிக்கரையில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில்பணிபுரிந்து வந்தார்.

தன்னை காதலித்து கைவிட்ட வாலிபரை பழி வாங்குவதற்காக அந்த வாலிபரின் பெயரில் முதல்வருக்கு இ மெயில் மூலம்மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கலைவாணி போலீஸில் தெரிவித்தார்.

கலைவாணி இப்போது ஜாமீனில் உள்ளார். இவர் மீதான விசாரணை முடிந்து விட்டது.

இந் நிலையில் கலைவாணி மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் பாலு,குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிகையுடன் வழக்குக்கு ஆதாரமாக 22 ஆவணங்களும் தாக்கல்செய்யப்பட்டன. 14 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை மே மாதம் 4ம் தேதி சைதாப்பேட்டை நீதிதமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் கலைவாணிக்கு 7வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X