For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை செயலர் லட்சுமி பிரானேஷ் இன்று ஓய்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் முதல் பெண் தலைமை செயலாளர் என்ற பெருமையைப் பெற்ற லட்சுமி பிரானேஷ் இன்று ஓய்வு பெறுகிறார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு பெறுகின்றனர். தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ்,வேளாண்மைத் துறை செயலர் பாஸ்கர தாஸ், மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சக வளர்ச்சி ஆணையராக மும்பையில்பணிபுரியும் வி.மாதவன் நாயர் ஆகியோர் இன்று ஓய்வு பெறுகின்றனர்.

இவர்கள் தவிர ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர் அபுல் ஹசன், திருச்சி மாவட்ட கலெக்டர் பாண்டியன், ராமநாதபுரம்மாவட்ட ஒழுங்கு முறை நடவடிக்கைகள் ஆணையர் ராஜமாணிக்கம், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் ராமதாஸ்,உணவுத் துறை முதன்மை செயலாளர் ராமகிருஷ்ணன்,

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கோலப்பன், பொதுத்துறை செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியஜவுளித்துறை செயலாளர் பூர்ணலிங்கம், நிர்வாக சீர்திருத்த ஆணையர் நாகராஜன் ஆகியோர் இவ்வருட இறுதிக்குள் ஓய்வுபெறுகின்றனர்.

ஏற்கனவே 5 அதிகாரிகள் இவ்வருடம் ஓய்வு பெற்று விட்டனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற சில மாதங்களில் தலைமைச் செயலாளர் பதவிக்கு லட்சுமி பிரானேஷ்நியமிக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதுகுறிப்பிடத்தக்கது.

தனது பதவிக்காலத்தின்போது பெரும் சர்ச்சைகளையும், பல்வேறு பரபரப்பான சூழல்களையும் சந்தித்தவர் லட்சுமி பிரானேஷ்.இவர் தலைமைச் செயலாளராக இருந்தபோதுதான், தமிழக அரசு ஊழியர்களின் மிகப் பெரிய வேலை நிறுத்தம், லட்சணக்கானோர்டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தேறியது.

தமிழக ஆளுநர் மாற்றம் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் இவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் திமுகவுக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியது. லட்சுமி பிரானேஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்தமனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

ஓய்வு பெறும் தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷுக்கு இன்று மாலை தலைமை செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சார்பில்பிரிவுபசார விழா நடக்கிறது.

இதேபோல, தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக உள்ள டிஜிபி நெயில்வாலும் இன்று பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக முன்பு நெயில்வால் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X