For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. 20 மணி நேரம் உழைத்து என்ன பயன்?: ராமதாஸ் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக ஜெயலலிதா கூறுகிறார். அப்படி உழைத்தும் தமிழக மக்களுக்கு ஏன் எந்தநன்மையும் ஏற்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

30க்கும் மேற்பட்ட கார்கள் புடை சூழ காஞ்சிபுரம் தொகுதியில் பாமக நறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். ராமதாஸின் கார்ஊர்வலத்தால் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஏராளமான திமுக, பாமக, மதிமுக தொண்டர்கள் சூழ்ந்து நின்றுவரவேற்றனர்.

டோல்கேட் பகுதியில் ராமதாஸ் பேசுகையில், இது அண்ணா பிறந்த மண். ஆனால் திராவிட இயக்கக் கொள்கைக்கு சற்றும்சம்பந்தம் இல்லாத ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் வந்து இங்கு வாக்கு கேட்டுச் சென்றுள்ளார்கள்.

சட்டசபை பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், கொடுத்த வாக்குறுதியைகாப்பாற்றுவோம் என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

ஏன் இப்படி திடீர் என்று கூறுகிறார்கள் என்றால், டிசம்பல் தேர்தல் வரலாம் என்ற காரணத்தால்தான். ஜெயலலிதாவின் ஆட்சியில்சாதனைகளை விட சோதனைகளே அதிகம்.

இந்தத் தொகுதி மக்கள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட முடிவு செய்து விட்டார்கள். நம் கூட்டணி மிகபலமானது. அந்த பலம் அப்படியே இருக்கும். நமது கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

ஆனால் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும்.

ஓட்டுப் போட அதிமுகவினர் ஒரு கையில் பணம் கொடுத்தால் இரு கை ஏந்தி அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டைமட்டும் உதயசூரியனுக்குப் போட்டு விடுங்கள்.

நல்ல அரசு என்றால் அதற்கு பல இலக்கணங்கள் உள்ளன.

நல்ல குடிநீர் தர வேண்டும், தரமான கல்வி அளிக்க வேண்டும், வளமான எதிர்காலத்துக்கேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும். மக்கள் உடல் நலம் காக்க மருத்துவமனைகள் இருக்க வேண்டும், மின் வசதி தர வேண்டும், அடிப்படை தேவைகளைபூர்த்தி செய்ய வேண்டும். இப்படி நிறைய உள்ளது. ஆனால் இதில் ஏதாவது ஒன்றையாவது இந்த அதிமுக ஆட்சியில் காணமுடியுமா?

20 மணி நேரம் உழைப்பதாக சொல்கிறார்கள். ஏன் பிரதமர் உழைக்கவில்லையா, நாங்கள் உழைக்கவில்லையா, மற்ற மாநிலமுதல்வர்கள் உழைக்கவில்லையா. இவர் 20 மணி நேரம் உழைத்தும் மக்களுக்கு என்ன பலன் கிடைத்து விட்டது என்று கேட்டார்ராமதாஸ்.

ராமதாஸின் பேச்சை அங்கு கூடியிருந்தோர் ஆராவாரம் செய்து ரசித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X