For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் மன நோயாளி ஏற்படுத்திய பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன நோயாளி ஒருவர், பெண்களை கட்டிப் பிடித்து கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரைஅனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்து கட்டி இழுத்துச் சென்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டியைச் சேர்ந்தவர் மோகன். மன நோயாளியான இவர் ஒரு கூலித் தொழிலாளி. மன நோயால் பாதிக்கப்பட்ட மோகனை அவரது மனைவி சாரதா தனது வீட்டில் ஒருஅறையில் அடைத்து வைத்து கவனித்து வந்தார். ஆனால் மன நோய் முற்றவே கோவை அரசு மருத்துவமனைக்கு மோகனை அழைத்து வந்தனர்.

மோகனின் சகோதரி பிரபாவதி, தம்பி ஆகியோர் மோகனை மருத்துவமனைக்குக் கூட்டி வந்தனர். காலையில் கூட்டி வரப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்துவார்டில் அனுமதித்தனர். அங்கு பிற்பகல் வரை மோகனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

பிற்பகலுக்கு மேல், மோகனின் நடவடிக்கை மாறியது. தனது படுக்கையிலிருந்து எழுந்த மோகன் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினார். பின்னர் திடீரென வார்டைவிட்டு வெளியே ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை.

மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடிய அவர் வழியில் தென்பட்டவர்களையெல்லாம் தள்ளி விட்டு ஓடினார். பின்னர் அங்கிருந்த சில பெண்களை கட்டிப் பிடித்துகன்னம், முகம், கழுத்தில் கடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மோகனின் நடவடிக்கையைப் பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள் அவரை அடிக்கத் தொடங்கினார். இதனால் பயந்து போன மோகன், மருத்துவமனையிலிருந்துவெளியே ஓடி வந்தார். பிறகு சாலையில் சென்றவர்களை கடிக்கத் தொடங்கினார்.

இதனால் பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து கை, கால்களைக் கட்டி தரையில் தரதரவென இழுத்து கொண்டு வந்தனர். பொதுமக்களின் மனிதாபிமானமற்றதாக்குதலால் மோகனின் உடல் முழுவதும் ரத்தம் வழிந்தது. ஆனால் அரசு மருத்துவமனை டாக்டர்களோ, பாவப்பட்ட மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கமுன்வரவில்லை.

மோகனின் உறவினர்கள் கதறி அழுதபடி, மருத்துவனைை ஆர்.எம்.ஓ.விடம் (இருப்பிட மருத்துவ அதிகாரி) சென்று முறையிட்டனர். இதையடுத்து அவர் விரைந்துவந்து, உடனடியாக மோகனுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதையடுத்து மோகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் மோகன் மீண்டும் மன நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் முதலிலேயே தகுந்த முன்னேற்பாடுகளுடன் மோகனைசிகிச்சைக்கு அனுமதித்திருந்தால் இந்தப் பிரச்சினையே எழுந்திருக்காது.

அவர்களது அலட்சியம் காரணமாகவே மோகனால் மற்றவர்களுக்கும், அவருக்கும் இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X