For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு தர எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடகம் கைவிரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்திற்கு திறந்து விடும் அளவிற்கு தங்கள் மாநில அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றுடெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கர்நாடகம் கூறியது.

காவிரி நதிநீர் பிரச்னையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்என்று காவிரி நதிநீர் நடுவர் மன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதன்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர்தருவதில்லை.

இதனால் தமிழக - கர்நாடக அரசுகளுக்கு இடையில் ஆண்டுதோறும் பிரச்னை ஏற்படுகிறது. இந் நிலையில், 9மாதங்களுக்குப் பின், காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

கண்காணிப்புக் குழுத் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான ஹரி நாராயணன் தலைமையில்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில தலைமைசெயலர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கர்நாடக தலைமைச் செயலர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலஉத்தரவை கர்நாடக அரசு முழுமையாக நிறைவேற்றி வருகிறது. தமிழகத்துக்கு 205 டி.எம்.சி., தண்ணீரைத் தரநடுவர் மன்ற இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 2004 - 2005ம் ஆண்டு மே மாதம் வரை தமிழகத்துக்கு 211 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகஅணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது என்றார்.

இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்தது. கர்நாடகத்தின் தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக தலைமைச்செயலர் நாராயணன், கர்நாடக தலைமைச் செயலர் கூறிய தகவல் தவறானது. கர்நாடகத்தில் இருந்து தமிழகத்தில்உள்ள மேட்டூர் அணைக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது.

தமிழகத்துக்கு வரும் காவிரி தண்ணீர், கர்நாடகத்தில் உள்ள பிலிகொண்டலு நிலையத்தில் கடைசியாககணக்கிடப்படுகிறது. பிலிகொண்டலு பகுதிக்கு வரும் தண்ணீரின் அளவை வைத்து, கர்நாடக அரசு தவறானதகவலை கூறுகிறது.

உண்மையில் மேட்டூருக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது. மேலும், பிலிகொண்டலு பகுதியில்தண்ணீரின் அளவை கணக்கிடும்படி நடுவர் மன்ற உத்தரவில் கூறப்படவில்லை. மேட்டூருக்கு வரும் தண்ணீரின்அளவை கணக்கிட வேண்டும் என்று தான் கூறப்பட்டுள்ளது என்றார்.

இதை மறுத்த கர்நாடக தலைமைச் செயலர், பிலிகொண்டலு பகுதியில் காவிரி நீரின் அளவை அளக்கும்பணியில் மத்திய காவிரி நீர் கமிஷன் தான் ஈடுபட்டுள்ளது. அந்தக் கமிஷன் நவீன கருவிகளை வைத்துகாவிரியில் பாயும் தண்ணீரின் அளவைக் கணக்கிடுகிறது என்றார்.

மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு:

கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக தலைமைச் செயலர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டதகவல்களைக் கூறியதால் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

சுமார் 4 மணி நேரம் நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்குப் பின் கண்காணிப்புக்குழு தலைவர் ஹரிநாராயணன் கூறுகையில், கூட்டம் சுமுகமாக நடந்தது. கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவைமுழுமையாக அமல்படுத்த கர்நாடக, தமிழக அரசுகள் ஒப்புக் கொண்டன என்றார்.

மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் காவிரி நதிநீரைப் பங்கிடுவது குறித்தும் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து உருவாகாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து, கர்நாடக தலைமைச் செயலர் கூறுகையில், இந்தப் பிரச்னை குறித்து காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்க முடியாது. தண்ணீர் பற்றாக்குறை, வறட்சிக் காலங்களில் காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது குறித்து பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் தான் விவாதிக்க வேண்டும்என்றார்.

கூட்டத்துக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த தமிழக தலைமைச் செயலர் நாராயணன், தமிழகத்துக்குக் கர்நாடகஅரசு வாரந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும். அதை உறுதிப்படுத்த காவிரி கண்காணிப்புக் குழுநடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஏற்கனவே பாக்கியுள்ள தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்குவதை காவிரிகண்காணிப்புக் குழு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.

தண்ணீர் திறக்க முடியாது: தரம்சிங்

இதற்கிடையே நேற்று பெங்களூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கர்நாடகத்தில் மழைஇல்லை.

கர்நாடக விவசாயத்திற்கே போதுமான தண்ணீர் இல்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது.தண்ணீர் இருக்கும் போது நாங்கள் திறந்து விட்டிருக்கிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X