விமானம் தாமதம்:சிங்கப்பூர் பயணிகள் தவிப்பு
சென்னை:
சிங்கப்பூரிலிருந்து வரவேண்டிய ஏர்-இந்தியா விமானம் வர தாமதமானதால் சென்னை விமான நிலையத்தில்சிங்கப்பூர் செல்லவேண்டிய 226 பயணிகள் 8 மணி நேரம் தவித்தனர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு மும்பை வழியாக தினமும் அதிகாலை 1.40 மணிக்கு ஏர்-இந்தியா விமானம்இயக்கப்படுகிறது. வழக்கம் போல இன்று அதிகாலை புறப்பட வேண்டிய விமானத்தில் செல்ல 226 பயணிகள்முன்பதிவு செய்திருந்தனர்.
பயணிகள் அனைவரும் விமானத்திற்காக காத்திருந்தனர். ஆனால் வழக்கமாக இரவு 11.30 மணிக்கேசிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரவேண்டிய விமானம் வரவில்லை. விமானத்தில் தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டதால் சிங்கப்பூரிலிருந்து மிகவும் தாமதாகவே புறப்பட்டது.
விமானம் தாமதமானதால் பயணிகள் அனைவரும் பொறுமை இழந்தனர். வழக்கமாக விமானம் தாமதமானால்பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். ஆனால் அதிகாலை நீண்ட நேரமாகியும் பயணிகள்அனைவரையும் விமான நிலையத்திலேயே காத்திருக்க வைத்ததால் ஆத்திரமடைந்த சில பயணிகள்கூச்சலிட்டனர்.
இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை சமரசம் செய்தனர். இதன் பிறகு பயணிகளுக்குவேண்டிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இறுதியில் இன்று காலை 9.45 மணியளவில் விமானம் வந்தது. இதன் பிறகு 10.45 மணியளவில் 8 மணி நேரதாமதத்திற்குப் பிறகு அந்த விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |