For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய ரேஷன் கார்டுகள்:8 நாட்கள் வினியோகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி முதல் எட்டு நாட்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வினியோகிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதில் புதிய குடும்ப அட்டைகள் வினியோகிப்பதற்கானவிண்ணப்பங்கள் 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெறப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 1 கோடியே 48 லட்சத்து53,268 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

.அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களின் அடிப்படையில், புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்ட வழங்குவதற்குதயார் நிலையில் உள்ளன.

புதிய குடும்ப அட்டைகள் கீழ்க்கண்ட முறையில் வழங்கப்படும்.

ஜூலை மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய அட்டைகள் வினியோகிக்கப்படும்.

அட்டைதாரர்களின் வசதிக்காக சம்பந்தப்பட்ட பொது வினியோகக் கடைகளிலேயே புதிய குடும்ப அட்டைகள் வழங்படும்.இதற்காக தனியாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மூலம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதால் ரேஷன்பொருட்களைப் பெறுவதில் எந்தவித சிரமும் இருக்காது.

ஒவ்வொரு பொது வினியோகக் கடைகளிலும் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளை எட்டுப் பகுதிகளாகப் பிரித்துஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாள் வீதம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

ஜூலை மாதம் 2, 3, 9, 10, 16,17,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடும்பஅட்டைகள் வழங்கப்படும்.

குடும்ப அட்டைகளைப் பெறுவற்கு, புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள குடும்பத் தலைவர் வர வேண்டும். அவர் வரஇயலாவிட்டால், அவரது அத்தாட்சி கடிதத்துடன் அட்டையில் இடம் பெற்றுள்ள வயது வந்த மற்ற குடும்ப நபர் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய அட்டையைப் பெற வருவோர், பழைய குடும்ப அட்டை, விண்ணப்பம் அளித்தற்கான ஒப்புகைச் சீட்டு, குடும்ப அட்டைகட்டணமாக ரூ. 5 ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

சம்பந்தப்பட்ட நாட்களில் புதிய குடும்ப அட்டையைப் பெற இயலாதவர்கள் ஜுலை 30 அல்லது 31 ஆகிய தேதிகளில்சம்பந்தப்பட்ட பொது வினியோகக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூலை மாதத்தில் குடும்ப அட்டையை வாங்காதவர்கள், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகத்தில்ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X