கடலூர்: ராணுவ ஆளெடுப்பில் வாலிபர் மரணம்
கடலூர்:
கடலூல் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நிகழ்ச்சியின்போது, ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட வேலூர் இளைஞர் சுருண்டுவிழுந்து பரிதாபமாக இறந்தார்.
கூட்ட நெரிசல் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சர்ந்த இளைஞர்கள் திருப்பிஅனுப்பப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் இளைஞர்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று காலை ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அப்போது வேலூரைச் சேர்ந்த வாலிபர் மலையாண்டி என்பவர் வேகமாகஓடியபோது கால் தடுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மலையாண்டி இறந்து விட்டதாக டாக்டர்கள்தெரிவித்தனர். அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல இன்னொரு இளைஞரும் ஓட்டத்தின்போது மயக்கமடைந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உடல் நிலை தேறி வருகிறார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |