இந்துக்களை புண்படுத்திய வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத கருணாநிதி
சென்னை:
இந்துக்களை புண்படுத்தும் விதத்தில் பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிமன்றத்தில்கருணாநிதி ஆஜராகவில்லை. இதனால் வழக்கு செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக புதன்கிழமை கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.இந் நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி, நீதிமன்றத்திற்குகருணாநிதி வராதது குறித்து நீதிபதி கோவிந்தராஜிடம் கூறி, அதற்கான காரணத்தையும் சமர்ப்பித்தார்.
இதையடுத்து விசாரணையை செப்டம்பர் மாதம் 6ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜ் ஒத்திவைத்தார்.
இதற்கிடையே கருணாநிதி சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரான கருணாநிதியின்வயதை கருத்திற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, அடுத்த கட்ட விசாரணையின் போது எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |