For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபச்சார வழக்கில் மலேசிய கார்த்திகேசு கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையைச் சேர்ந்த பெண்ணை மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கியமலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு, மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த கரீஷ்மா என்பவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந் நிலையில் மலேசியாவில் வீட்டுவேலைக்காக அவர் சென்றார். அங்கு கார்த்திகேசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொண்டுஅங்கேயே வாழத் தொடங்கினார்.

சில கால வாழ்க்கைக்குப் பின்னர் கார்த்திகேசுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை திரும்பினார். கரீஷ்மாவைத் தேடிகார்த்திகேசுவும் சென்னை வந்தார். இந் நிலையில் கார்த்திகேசு மீது போலீஸில் புகார் செய்தார் கரீஷ்மா.

அதில், மலேசியாவில் தன்னைக் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் கார்த்திகேசு ஈடுபடுத்தியதாகவும், தற்போது சென்னைக்குவந்தும் தன்னை கட்டாயப்படுத்தி மலேசியாவுக்கு வரக் கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கரீஷ்மாவுக்காக, சிவகாசி ஜெயலட்சுமிவழக்கில் முன்பு ஆஜரான வழக்கறிஞர் அழகிரிசாமி தான் வாதாடினார்.

வழக்கு நிலுவையில் இருந்த போதே, கரீஷ்மாவும், கார்த்திகேசுவும் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டு சேர்ந்துவாழத் தொடங்கினர். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இந் நிலையில் கார்த்திகேசு மீது பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. இதுதொடர்பாக சில வழக்குகளும் அவர் மீது பதிவுசெய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிய கார்த்திகேசு புதிய வழியைக் கடைப்பிடிக்கத்தொடங்கினார்.

அதாவது ஆந்திராவிலிருந்து பெண்களை வரவழைத்து அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார்.நெல்லூரைச் சேர்ந்த ராணி, சேலத்தைச் சேர்ந்த விஜயா (இவர் சிங்கப்பூர், மலேசியாவுக்கு அடிக்கடி சென்று நடனமாடியும்,விபச்சாரம் செய்தும் தொழில் நடத்தி வருகிறார்) இருவரையும் மாதச் சம்பளத்தில் விபச்சாரத்தில் ஈடுபட வைத்தார்.

வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்காக இணையதளம் ஒன்றையும் கார்த்திகேசு தொடங்கியுள்ளார். மேலும், தொலைபேசி,செல்போன்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களைப் பிடித்து, அவர்களுக்கு அழகிகளை அனுப்பி பணம் சம்பாதித்து வந்தார்.

இந் நிலையில் தான் வாடிக்கையாளர் என நினைத்து சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் என்பவரை கார்த்திகேசு தொடர்பு கொண்டுபெண்கள் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்த்திகேசுவைப் பிடிக்க முடிவு செய்த லட்சுமணன், போலீஸ்படையை உஷார்படுத்தினார்.

பின்னர் வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே பெண்களுடன் கார்த்திகேசுவை வருமாறு கூறினார். அவர் கூறியபடி 2பெண்களுடன் கார்த்திகேசு சொன்ன இடத்திற்கு வந்தார். அப்போது போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவருடன் இருந்த இரண்டு பெண்களும் கல்லூரி மாணவிகள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்துஅவர்களை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பி விட்டனர். பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாககார்த்திகேசுவைக் கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த வடபழனியைச் சேர்ந்த ஜவஹர்லால் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரையும்போலீஸார் தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X