For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வினாத்தாள் லீக்: ஐ.ஜி உள்பட 24 பேர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸ் தேர்வுக்கான வினாத் தாள்கள் இரண்டு முறை வெளியானது தொடர்பாக தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையஐ.ஜி. ராதாகிருஷ்ணன் மற்றும் 23 காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலில் 11 போலீஸார் மட்டுமே சஸ்பெண்ட் ஆனதாகக் கூறப்பட்டது. ஆனால், ஐஜி உள்பட 24 காக்கிககள் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.

காவலர் தேர்வுக்காக இரண்டு முறை எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் இரண்டு முறையும் வினாத் தாள்கள் முன்கூட்டியே வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் தண்டபாணி என்பவர்இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இரண்டு முறை காவலர் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதால், உயர் அதிகாரிகளுக்கும் இதில் நிச்சயம்தொடர்பு இருக்கும். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இந்த விஷயத்தில் சிக்கியுள்ள உயர் அதிகாரிகள யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உள்துறைச் செயலாளர், டிஜிபி,சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால், இந்தத் மொள்ளமாரித்தனம் செய்த போலீஸ் அதிகாரிகளையும் திருட்டுத்தனம் செய்த போலீசாரையும் வழக்கம்போலகாப்பாற்ற முயன்ற ஜெயலலிதா அரசு, நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்தது.

இந் நியிைல் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையைத்தாக்கல் செய்தனர். டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில்,

எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பொது நுழைவுத் தேர்வு மற்றும் சைக்காலஜி தேர்வுமீண்டும் நடத்தப்படும். கடந்த முறை வினாத்தாள் வெளியானதைப் பயன்படுத்தி தேர்வு எழுதிய 45 பேர் மீண்டும் தேர்வு எழுதஅனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையப் பொறுப்பில் உள்ள ஐ.ஜி. ராதாகிருஷ்ணன்உள்ளிட்ட 24 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 15 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிக்கிய, டிஜிபி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஜீவரத்தினம் விபத்தில் இறந்து விட்டார்.ரயில் மோதி அவர் இறந்து விட்டார். அவரது சாவுக்கும், இந்த விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அது ஒருவிபத்துத்தான். எழும்பூர் ரயில்வே போலீஸார் அதை விசாரித்து விபத்துதான் என்று அறிக்கை கொடுத்துள்ளனர்.

கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன. எனவே சிபிஐ விசாரணைக்கு விடத் தேவையில்லை என்று அலெக்சாண்டர் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 23 காவலர்களில் 12 பேர் சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில்பணியாற்றி வந்தவர்கள். இவர்களில் சேகர் என்பவர் கூடுதல் டிஜிபி ஒருவரிடம் டிரைவராகப் பணியாற்றி வந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X