For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னடம் பேசுவோர் வாக்குகளை குறி வைக்கும் ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி:

தமிழகத்தில் வட மாவட்டங்களில் மட்டுமல்லாது வரும் சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களிலும் பாமக போட்டியிடும்,திமுகவிடம் தென் மாவட்ட சீட்களையும் கேட்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்தது. கூட்டத்தில் ராமதாஸ்பேசுகையில், வட மாவட்டங்களில் மட்டும் நமது கட்சி இல்லை. தென் மாவட்டங்களிலும் உள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் வரும் சட்டசபைத் தேர்தலில் நமது கட்சி தென் மாவட்டங்களிலும் போட்டியிடும், இங்குபோட்டியிட திமுகவிடம் சீட் கேட்போம். தமிழகத்தில் மொத்தம் 12,560 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 5,000ஒன்றியங்களையாவது கைப்பற்ற வேண்டும்.

அதேபோல 102 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் பாதியையாவது கைப்பாற்றியாக வேண்டும். இதற்காகதிட்டமிட்டு செயலாற்ற வேண்டும். வருகிற சட்டசபைத் தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி சேரப் போகிறோம் என்பதைஎல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் 2011ம் ஆண்டு நடைபெறும் தேர்தலின் போது, நம்முடன் கூட்டணி வைத்துக் கொள்ள கட்சிகள் போட்டியிடவேண்டும்.

குடிப்பழக்கம் உடல் நலனுக்கும், சமூக நலனுக்கும், குடும்ப நலனுக்கும் கேடானதாகும். நமது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குகுடிப்பழக்கம் இருக்கக் கூடாது. அப்படி யாராவது குடிப்பழக்கத்துடன் இருந்தால் அவர்கள் குறித்து எனக்கு கடிதம் எழுதுங்கள்.நான் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கிறேன்.

ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இது நமது பண்பாட்டுக்கு விரோதமானது. கண்ட கண்டஇடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, ஆபாச சுவரொட்டிகள் ஒட்டுவதையும் நமதுகட்சியினர் எதிர்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

தென் மாவட்டங்களில் காலூன்ற பல்வேறு பிரயத்தனங்களை ராமதாஸ் செய்து வருகிறார். ஆனால் திருச்சியைத் தாண்டி உள்ளமாவட்டங்களில் பாமகவுக்கென்று பெரிய சக்தி ஏதும் இதுவரைஉருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வன்னியர்கள்(வன்னியக் கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு) எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள கன்னட மொழி பேசுவோரை பாமக பக்கம் இழுக்க ராமதாஸ் தீவிர முயற்சிகள்மேற்கொண்டுள்ளார். கன்னட மொழி பேசும் கெளடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களில் கணிசமாகஉள்ளனர்.

இவர்கள் தங்களை கவுண்டர் என்று தான் கூறிக் கொள்கிறார்கள். இவர்களை சந்தித்து வரும் பாமக பிரமுகர்கள் நீங்களும்வன்னியக் கவுண்டர்கள் தான், நம் இருவருக்கும் மொழி தான் வேறு, ஆனால் இருவருமே கவுண்டர்கள் தான். எனவேபாமகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள்.

உங்களது சமூகத்தையும் மேலே தூக்கி விடுகிறோம். பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். பாமகவினரின்இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கம்பம், உத்தமபாளையம், சுருளி உள்ளிட்ட இடங்களில் பாமக கொடிபட்டொளி வீசிப் பறந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை கருத்தில் வைத்துத் தான் தென் மாவட்டங்களிலும்போட்டியிடுவோம் என ராமதாஸ் கூறத் தொடங்கியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X