For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரத்தை விலக சொல்ல ஜெவுக்கு அருகதை உண்டா?: காங் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நளினி சிதம்பரம் விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்ற அதிமுக, பாஜகவின்கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.

வருமான வரித்துறை தொடர்பான முக்கியமான வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜரானதையடுத்துசிதம்பரம் பதவி விலக வேண்டும், அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாகநாடாளுமன்றத்தையே கிடுகிடுக்க வைத்தன அதிமுகவும் பாஜகவும்.

ஆனால், இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்திநடராஜன் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்து வருகிறார்.

சாதாரண மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தில் முறைகேடு செய்ததாக ஜெயலலிதா மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சிதம்பரத்தை பதவி விலகச் சொல்ல ஜெயலலிதா போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

சிதம்பரம் விவகாரத்தில் குளிர்காய நினைக்கிறார் ஜெயலலிதா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்துவிளங்குவதாக தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியுள்ார். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைஅவரும் அவரது கட்சியினரும் நிறுத்தி விட்டு இதைச் சொல்லட்டும் என்றார் ஜெயந்தி.

வாசனும் தாக்கு:

அதே போல காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி தமிழக அரசுக்கு நஷ்டம் விளைவித்த ஜெயலலிதா, அதை நீதிமன்றத்தின்கொட்டுக்குப் பின் திருப்பித் தருவதாகச் சொன்னவர்.

வருமானத்தையும் தாண்டி ரூ. 66 கோடிக்கு சொத்து குவித்த அவரது வழக்கு தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்தில் நடந்துவருகிறது. ஆனாலும் பதவியில் விடாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தன் மீது பல ஊழல் வழக்குகள் நடந்துவரும் நிலையில் பதவியை ராஜினாமா செய்யும் சிந்தனைை கூட இல்லாத ஜெயலலிதா, ப.சிதம்பரத்தை பதவி விலக் சொல்வதுவேடிக்கையாகவும் விந்தையாகவும் உள்ளது.

அரசியல் ஒழுக்கம் பற்றி யாருக்கும் உபதேசம் செய்யும் தகுதி ஜெயலலிதாவுக்கு நிச்சயமாக இல்லை என்பதை எல்லோரும்அறிவோம். அதை மறந்துவிட்டு சிதம்பரத்துக்கு உபதேசம் செய்வது கேலிக்குரியது மாத்திரமல்ல கண்டனத்துக்குரியது என்றுகூறியுள்ளார்.

ப.சி மன்னிப்பு கேட்க பாஜக கோரிக்கை:

இதற்கிடையே நடந்த சம்பவத்துக்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக கோரியுள்ளது.

சிதம்பரத்தை மனனிப்பு கேட்க வைப்பது பிரதமர் மன்மோகன் சிங்கின் கடமை என பாஜக செய்தித் தொடர்பாளர் சுஷ்மாசுவராஜ் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X