For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போதைக்கு அரசியல் கிடையாது: கார்த்திக்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

இப்போதைக்கு நான் அரசியலில் குதிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடிக்கலாம் என நடிகர்கார்த்திக் கூறியுள்ளார்.

விஜயகாந்த் வருகிற 14ம் தேதி அரசியலில் குதிக்கப் போகிறார். அவரைப் பின்பற்றி நடிகர் கார்த்திக்கும் தனது சரணாலயம்தொண்டு அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றப் போகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

மதுரையில் சமீபத்தில் நடந்த கார்த்திக் ரசிகர்கள் மாநாட்டின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து கார்த்திக் அறிவிப்பார் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் ரசிகர்களிடையே ரகளை ஏற்பட்டதால் அந்த கூட்டம் பாதியிலேயேமுடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் கோவை வந்த கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது சரணாலயம் அமைப்பு சமுதாயத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒன்று. இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

சரணாலயம் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பினருக்கும்சரணாலயம் அமைப்பு உதவி வருகிறது. எனது சொந்தப் பணத்திலும், ரசிகர்களின் பங்களிப்பிலும்தான் இந்த அமைப்புஇயங்குகிறது.

இந்த அமைப்பை வைத்து நான் அரசியலில் இறங்கப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் இப்போதைக்கு எனக்கு அந்த எண்ணம்இல்லை. ஆனால் சமுதாய நலனைக் கொண்டு எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

விரைவில் நான் சொந்தப் படம் எடுக்கவுள்ளேன். எனது அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இந்தப் படத்தை எடுக்கப்போகிறேன். எனது மகன் இப்போதைக்கு நடிப்புக்கு வர மாட்டார். அவருக்கு இன்னும் வயது இருக்கிறது.

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நல்லது செய்தால் வரவேற்பேன். நடிகர்களால் மக்கள் கவலைகளை,பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன் என்றார் கார்த்திக்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X