For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாய்ப்புகளின் தாயகம் அதிமுக: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுக்குப் பதவிகளும், பணிகளும் கொடுத்து அழகு பார்க்கும் கட்சி அதிமுக,இது வாய்ப்புகளின் தாயகம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரகுமார், போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் மகள் ரஞ்சிதா,அமைச்சர் பாண்டுரங்கன் மகள் கவிதா ஆகியோரது திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை கலைவாணர் அரங்கில்நடத்தி வைத்தார்.

3 மணமகன்களின் கையிலும் தாலியை எடுத்துக் கொடுத்து அவர்களை ஆசிர்வதித்த ஜெயலலிதா பின்னர் விழாவில்பேசுகையில், கழகப் பணிகளுக்கும், அரசுப் பணிகளுக்கும் இடையே இந்தக் கண்மணிகளின் திருமணங்களையும் நடத்திவைக்கின்ற பணியையும் எனக்குக் கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியோடு இந்தப் பணியை ஏற்று மூன்று இணைகளுக்கும் நான்திருமணம் நடத்தி வைத்திருக்கின்றேன்.

இல்வாழ்க்கையின் பண்பையும், பயனையும் சுருக்கமாக எடுத்துரைத்த நூல் திருக்குறள். அதில் ஒரு குறள் வருகிறது;

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது என்பது வள்ளுவப் பெருமானின் வாக்கு. ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் தூண் போல இருந்து எனக்குஉறுதுணையாக இருப்பவர். மிகக் கடினமான உழைப்பாளி. உண்மையானவர், அனைத்துப் பிரிவினரையும் அன்போடுஅரவணைத்து செல்லுகின்ற ஆற்றல் படைத்தவர். எந்தப் பணியை அவருக்கு நான் கொடுத்தாலும் உண்மையானஈடுபாட்டோடும், உயரிய திறமையோடும் அதனை அவர் செய்து முடிப்பார்.

அதேபோலத்தான் நத்தம் விஸ்வநாதன், பாண்டுரங்கன் ஆகியோரும். இருவரும் தொடக்க காலத்திலிருந்தே அதிமுகவில்தங்களை இணைத்துக் கொண்டவர்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்.

இந்த நேரத்தில் ஒரு கருத்தைக் கூற விரும்புகின்றேன். சில கட்சிகளில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பதவிகளில் பார்த்தமுகங்களையே பார்க்க வேண்டியிருக்கிறது. அங்கே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படுகின்றன.மற்றவர்களுக்கு குறிப்பாக புதியவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படுவதே இல்லை.

அதிமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. இங்கே திறமைக்கு, இயக்கப் பற்றுக்கு, தலைமை மீது கொண்ட விசுவாசத்திற்கு, அயராதஉழைப்புக்கு மதிப்பு உண்டு. இதற்கு பாண்டுரங்கன் ஒரு நல்ல உதாரணம்.

அமெரிக்காவை வாய்ப்புகளின் தாயகம் என்பார்கள். அதுபோலத்தான் அதிமுகவும். இங்கே இளைஞர்களுக்கு வாய்ப்புகள்அதிகம். எனவே எந்த இளைஞரும் வாய்ப்புகள் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். பாண்டுரங்கன் போல உழையுங்கள்,உங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது என்று கூறிக் கொள்கிறேன். இந்த மூன்று பேருமே கழகத்திற்குக் கிடைத்த தூண்கள்,சொத்துக்கள்.

ஐந்திணை ஐம்பது என்ற நூலில் உண்மையான இல்லற வாழ்வை அது அற்புதமான பாடல் மூலம் வெளிப்படுத்துகிறது.இல்வாழ்க்கைக்கு அன்புதான் அடிப்படை என்பதை விலங்குகள் மூலம் அழகாக விளக்குகிறது ஐந்திணை.

பருக நீர் இல்லாத பாலை நிலம். அந்தப் பாலை நிலத்தில் இரண்டு மான்கள் தாகம் தாங்காமல் எங்கெங்கோ அலைந்துதிரிகின்றன. அப்போது திடீரென ஒரு சுனை தென்படுகிறது. அதில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கின்றது. ஒரு மானுக்குத்தான்அது போதும். ஆனால் தாகத்தில் இருப்பதோ இரண்டு மான்கள்.

ஒரு மான் இன்னொன்றுக்கு விட்டுக் கொடுக்கலாம், ஆனால் அடுத்த மான் அதற்கு சம்மதிக்காது. எனவே ஆண் மான் சுனைஅருகே சென்றது. தண்ணீரில் வாய் வைத்தது. ஆண் மான் குடிப்பதைப் பார்த்து மகிழ்ந்த பெண் மான் சுனையில் தானும் நீர்குடித்தது.

உண்மையில் ஆண் மான் தண்ணீர் குடிப்பது போல நடித்தது, இல்லாவிட்டால் பெண் மான் குடிக்காதே, அது குடிக்கிறது என்றுநினைத்து தானும் குடித்தது பெண் மான். எப்பேர்ப்பட்ட அன்பு நாடகம், எப்பேர்ப்பட்ட தியாக நாடகம். இதை நான்கேவரிகளில் அழகாக விளக்குகிறது ஐந்திணைப் பாடல்.

மான்களின் இந்தப் பண்மை மானுடர் பின்பற்றினால் இல்லறம் என்றும் நல்லறம் ஆகும் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X