நியூ படத்திற்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!
புதுடெல்லி:
நியூ படத்தைத் திரையிட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சூர்யா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சேமா,ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் திங்கள்கிழமை ஒரு இடைக்காலத் தீர்ப்பைநீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி நியூ படத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. மேலும், இந்த வழக்கை தொடர்ந்த பெண் வழக்கறிஞர் அருள்மொழிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும்நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சூர்யா தரப்பு வழக்கறிஞர் ரோடகி வாதிடுகையில், இப்படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்குமேற்பட்டோர்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். எனவே இந்தப் படம் மூலம் கலாச்சார சீர்கேடு ஏற்படும் என்றுகூறுவதை ஏற்க முடியாது என்று வாதிட்டிருந்தார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |