• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஷ்பு மீது நடவடிக்கை இல்லை: நடிகர் சங்கம்!: வி.சிறுத்தைகளுக்கு கண்டனம்

By Staff
|

சென்னை:

குஷ்பு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்களுக்கு நடிகர் சங்கம் பாறுப்பேற்க முடியாது என்று தென்னிந்தியநடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே வார இதழுக்கு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், கல்யாணத்திற்கு முன்பு தமிழக பெண்கள் செக்ஸ் உறவுவைத்துக் கொள்வது சாதாரணமாகி வருவதாகக் கூறியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தால் அதிகம் நெருக்கடிக்குள்ளானது நடிகர் சங்கம். தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் சங்கம் படு வேகமாகசெயல்பட்டதைப் போல, குஷ்பு விவகாரத்தில் ஏன் செயல்படவில்லை, விஜயகாந்த் மெளனம் காப்பது ஏன் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் காட்டமாக கேட்டிருந்தார்.

இச் சூழ்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலையில் கூடியது. சங்கத் தலைவர் விஜயகாந்த், பொதுச்செயலாளர் சரத்குமார், நடிகர்கள் கார்த்திக், நெப்போலியன், சத்யராஜ், பிரபு, ராதாரவி, விஜயக்குமார், செந்தில், நடிகைமனோரமா உள்ளிட்டோர் இதில் கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் விஜயகாந்த், சரத்குமார் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் சங்கத்தின் சார்பில்சரத்குமார் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கோ,தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் நிர்ப்பந்தித்ததில்லை. அப்படிஇருக்க குஷ்பு, இந்தியா டுடே என்ற பத்திரிக்கையில், கொடுத்த பேட்டி அவருடைய சொந்தக் கருத்து.

தன்னுடைய பேட்டி மூலமாக எழுந்த பிரச்சினைளை அறிந்து தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைதிரும்பி வந்து தான் சொன்ன கருத்துக்கள் மற்றவர்கள் மனதை புண்படுத்தியிருந்ததால், தனது பேட்டிக்காக மன்னிப்பையும்,வருத்தத்தையும் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிக்கை வாயிலாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் எந்த நடிக, நடிகையர் தெரிவித்த தனிப்பட்ட கருத்துக்களுக்கோ, அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளிலோ சங்கம்தலையிட்டதில்லை.

நடந்த பிரச்சனையில் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களிடம் கடிதம் மூலம் புகார் ஏதும் தராமல்,பாரம்பரியம் மிக்க ஐம்பத்து மூன்று ஆண்டுகள் வரலாறு கொண்ட, உலக முன்னோடிகளாம் என்.எஸ்.கிருஷ்ணன், மக்கள் திலகம்எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரால் உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட எங்கள் தென்னிந்தியநடிகர் சங்கத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தி,

செருப்பு, துடைப்பத்தால், அடித்து சங்கத்தின் பாரம்பரியத்தையும், புகழையும் குலைத்து சங்கத்தை அவமதித்த விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம்தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட விஷயம் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அந்த வழக்குகள் பற்றி சங்கம் எந்தக் கருத்தும் தெரிவிக்கஇயலாது.

மேலும் நம்முடைய உறுப்பினர் நடிகர், நடிகையர் எங்கு பேட்டி கொடுத்தாலும், நிதானமாகவும், எதிர்காலத்தில் எந்தப்பிரச்சினைகளையு உருவாக்காத வகையிலும், யார் மனதும் புண்படாத வகையிலும் பேட்டி அளிக்கும்படிவலியுறுத்தப்படுகிறார்கள்.

அப்படி ஏதேனும் பேட்டி கொடுத்து அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சங்கம் பொறுப்பு ஏற்காது.

பத்திரிக்கை நண்பர்களுக்கு பத்திரிக்கை சுதந்திரம் என்கிற உரிமையை பயன்படுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாகமுறையாக சங்க நிர்வாகிகளின் கையெழுத்துடன் கூடிய செய்திகளை வெளியிட வேண்டுகிறோம்.

அதை விடுத்து சொந்த கருத்துக்களை, கற்பனைகளை செய்தியாக வெளியிடுவது எங்களது உறுப்பினர்கள், நிர்வாகிகளை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. எனவே இப்படிப்பட்ட கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பத்திரிக்கைகளுக்கு அட்வைசுடன் அந்த அறிக்கை முடிகிறது.

அறிக்கை வெளியிட்ட பின்னர், நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் குறித்து விஜயகாந்த்திடம் கேட்டபோது அதுகுறித்துப்பேசவே மறுத்து விட்டார். இந்த அறிக்கைதான் எங்களது அனைவரது கருத்தும் ஆகும் என்று மட்டும் அவர் கூறி விட்டு போய்விட்டார்.

மற்ற நடிகர், நடிகையரும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தங்கர் விவகாரத்தில் படு ஆவேசமாக காணப்பட்ட நடிகர் சங்கம் குஷ்பு விவகாரத்தில் பட்டும் படாமலும் நிலை எடுத்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X