For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஜெயேந்திரருக்கு நியாயம் கிடைக்காது: உச்சநீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜெயேந்திரர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

ஜெயேந்திரர் மீதான வழக்கை புதுச்சேரி மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிஆர்.சி.லகோத்தி, நீதிபதி ஜி.பி.மாத்தூர் ஆகியோர் தங்களது தீர்ப்பில் தமிழக அரசை கண்டித்து கூறியிருப்பதாவது:

ஜெயேந்திரர் மீது தொடரப்பட்ட கொலை வழக்கு விசாரணையை தமிழகத்தில் நடத்தினால் நேர்மையாகநடக்காது. ஜெயேந்திரர் கைது சம்பவம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி, பாஜக முக்கியத் தலைவரான முரளிமனோகர் ஜோஷி, போன்றவர்கள் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர்.

அவற்றை பத்திரிகைகளில் வெளியிட்டவர்கள் மீது கூட வழக்குகள் போடப்பட்டன.

ஜெயேந்திரருக்கு ஆதரவாக தொழில்ரீதியாக செயல்படும் வழக்கறிஞர்களை கூட ஜெயலலிதா அரசு விட்டுவைக்கவில்லை. அவர்களும் அச்சுறுத்தப்பட்டனர். மூத்த வழக்கறிஞரான கே.எஸ். தினகரன் 43 ஆண்டுகள்தொழில் புரிந்தவர். அவரே நீதிமன்றத்தில் அச்சுறுத்தப்பட்டார்.

இரண்டு பெண் வழக்கறிஞர் மீது வழக்கு தொடரப்பட்டு, அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கறிஞர்கள்கூட சுதந்திரமாக செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஜெயேந்திரர் வழக்கில் நியாயமாகவாதாட முடியாது.

ஜெயேந்திரருக்கு ஆதரவாகவோ, அந்த வழக்கு குறித்தோ ஏதாவது எழுதினால் அவர்கள் மீது வழக்குபோடப்படும் நோக்கத்தோடு அரசு எந்திரம் செயல்பட்டு உள்ளது. பல ஆவணங்கள் மூலமாக இந்த உண்மைகள்தெரியவந்துள்ளது.

ஜெயேந்திரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என்றநோக்கத்தோடு அரசு செயல்படுகிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஜெயேந்திரர் தான் குற்றவாளிஎன்று முடிவே செய்துவிட்டு விசாரணையை நடத்தியுள்ளது தமிழக போலீஸ்.

பத்திரிகைகளின் குரல் வளையை நெரித்து, உயர் பதவி வகிப்போர் மீதும் வழக்கு போட்டு அசாதாரணமானசூழ்நிலையை உருவாக்கி அந்த சூழ்நிலையில் தான் வழக்கை நடத்த வேண்டும் என்ற வாதம் ஏற்கதக்கதல்ல.

வழக்கு விசாரணையை புதுவைக்கு மாற்றம் செய்வதாலேயே, நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கிறோம் என்றுகருதிவிடக் கூடாது. தமிழக அரசு எந்திரம் பாராபட்சமின்றி செயல்பட்டு இருந்தால், வழக்கை வேறு மாநிலத்துக்குமாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

வழக்கில் தமிழக அரசு செயல்பட்ட விதம் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. 2005 ஜனவரி 10ம்தேதி ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மறுநாளே இளைய சங்கராச்சாரியர் கைதுசெய்யப்பட்டார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 16 பேர் மீது ஜனவரி, பிப்ரவரி ஆகிய 2 மாதங்களுக்குள் குண்டர் சட்டம்பாய்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அவர்கள் எல்லோரும் ஜாமீனில் வெளியே வந்து விடுவார்களோ என்றுகருதித்தான் தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவியது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒட்டு மொத்தமாக அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்பு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. வழக்குவிசாரணை தமிழகத்தில் நடந்தால் ஜெயேந்திரருக்கோ, குற்றம் சாட்டப்பட்ட இதர நபர்களுக்கோ நியாயமானத்தீர்ப்பு கிடைக்காது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தமது தீர்ப்பில் தமிழக அரசை கண்டித்து கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X