வெள்ள நிவாரண நிதி: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
தமிழகத்துக்கு ரூ. 1,220 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர்ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவைஉடனடியாக அனுப்ப கோரி இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதகிறேன்.
கடந்த 2 வாரங்களாக கடும் மழையாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தாலும் தமிழகத்தின் பல் வேறுமாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
சென்னை நகரில் கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்தது. எனது அமைச்சரவையைசேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் அனைத்து நிவாரணபணிகளையும் மேற்கொண்டனர்.
நானும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். ஏற்கனவே சுனாமியால்பாதிக்கப்பட்டடிருந்த பகுதிகள் நிவாரணப் பணிகளுக்காக ரூ.130 கோடியை எனது அரசு ஒதுக்கீடு செய்தது.
மாநிலத்தின் பேரழிவு நிவாரண நிதி முழுவதும் ஏற்கனவே செலவு செய்யப்பட்டு விட்டது. எனவே தேசிய பேரழிவுதுயர் துடைப்பு நிவாரண நிதியில் இருந்து ரூ.1120 கோடி தமிழகத்துக்கு ஒதுக்கித் தர கோருகிறேன்.
எனவே மத்திய அதிகாரிகள் குழுவை உடனே தமிழகத்துக்கு அனுப்பி இழப்பீடுகளை பார்வையிட்டு மத்தியஅரசுக்கு நிதி குறித்து பரிந்துரைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |