மாநகராட்சி கூட்டம்: எதிர்த்து கராத்தே வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை வரும் 21ம் தேதி ஆணையர் விஜய்குமார் கூட்டியுள்ளதற்கு தடை விதிக்கக் கோரி துணைமேயர் கராத்தே தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.
ஆனால், கராத்தேவின் நோட்டீசுக்கு விஜய்குமாரிடம் இருந்து பதில் இல்லை. இதையடுத்து 21ம் தேதி மாநகராட்சி மன்றத்தைவிஜய்குமார் கூட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கராத்தே தியாகராஜன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை மனுதாக்கல் செய்யப்படுகிறது.
இத் தகவலை கராத்தேவின் வழக்கறிஞர் வெங்கடேசன் தெரிவித்தார்.
இது குறித்து மாநகராட்சியின் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் கூறுகையில்,
தியாகராஜனின் கையெழுத்து இல்லாமல் நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. தலைமறைவாக உள்ளதியாகராஜன் எவ்வாறு கையெழுத்திட முடியும்?. நாளை அவரது சார்பாக மனு தாக்கல் செய்தால் அதனை கடுமையாகஎதிர்ப்போம் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |