For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் மகனுக்கு அன்னிய வங்கி ரூ.6 கோடி நிதி: மோசடி நடந்ததாக கலாமிடம் ஜெ. புகார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் நிதி முறைகேடுகள் செய்துள்ளதாகவும், இதனால் சிதம்பரத்தை அமைச்சர் பதவியில்இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் அதிமுக எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.

பி.ஜி. நாராயணன் தலைமையில் இன்று டெல்லியில் ஜனாதிபதியை நேரில் சந்தித்த ராஜ்யசபா அதிமுக எம்பிக்கள் குழு இந்தமனுவை அளித்தது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும் அவரது உறவினர் பழனியப்பச் செட்டியாரும் சமீபத்தில் ஹேலிடன் மார்க்கெட்டிங் சர்வீசஸ்என்ற நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம் கற்பகாம்பாள் டெக்ஸ்டைல்ஸ் என்ற மில்லை விலைக்கு வாங்கியது.

மில்லை வாங்க நெதர்லாந்து நாட்டு வங்கியான ராபோ பாங்கிடம் ரூ. 6 கோடியை கார்த்திக் கடனாகப் பெற்றுள்ளார். இதற்குபாதுகாப்பு உத்தரவாதம் எதையும் வங்கியிடம் அவர் அளிக்கவில்லை.

அந்த நெதர்லாந்து வங்கி இந்தியாவில் தனது கிளைகளைத் தொடங்க நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் அனுமதி கேட்டு வருகிறது.இந் நிலையில் அந்த வங்கி கார்த்திக்குக்கு உத்தரவாதமே இல்லாமல் கடன் வழங்கியது ஏன்?. இது பல்வேறு ஐயப்பாடுகளைஏற்படுத்துகிறது.

மேலும் ஹேலிடன் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட கற்கபாம்பாள் மில்லின் பங்குகள் ப.சிதம்பரம் மற்றும் அவரது சகோதரர்லட்சுமணன் செட்டியாருக்கு உரியவை. இந்த பங்கு விற்பனை குறித்து இந்திய பங்கு வர்த்தகக் கழகத்திடம் சிதம்பரம்தெரிவிக்கவில்லை.

நிதியமைச்சர் என்ற பதவியை வைத்துக் கொண்டு தனது மகனுக்கு வெளிநாட்டு வங்கியிடம் இருந்து முறைகேடாக ரூ. 6 கோடிகடன் வாங்கித் தந்தசிதம்பரத்தை மத்திய நிதியமைச்சர் பொறுப்பில் தொடர விடக் கூடாது. அவரை நீக்க வேண்டும். மேலும் இந்தகடன், பங்கு விற்பனை ஆகியவை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதிமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம் மீது அணு குண்டை வீசியுள்ளது அதிமுக. பாஜகவும் அதிமுகஉள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்பலாம் என்று தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போதும் சிதம்பரத்தை குறி வைத்தது அதிமுக. நிதியமைச்சகம் சார்பாக அவரது மனைவிநளினி சிதம்பரம் வழக்குகளில் வாதாடியதை விவகாரமாக்கியது.

இந் நிலையில் கோடிக்கணக்கிலான வெளிநாட்டுக் கடன் விஷயத்தில் கார்த்திக்கையும் சிதம்பரத்தையும் பிரச்சனையில் ஆழ்த்தமுயன்றுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இன்று ஜனாதிபதியைச் சந்தித்த அதிமுக குழுவில் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் எம்பியுமான ஜோதி, மலைச்சாமி, நிதிமோசடி வழக்குகளில் தொடர்புடையவரும் சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி தினகரன், காமெடி எஸ்எஸ் சந்திரன்,காமராஜ், தங்கத் தமிழ்ச்செல்வன், அன்பழகன், கோவிந்தராஜா, கோகுல இந்திரா, சயீத்கான், பெருமாள் ஆகிய எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர்.

அதிமுகவின் குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரம் தரப்பு கூறுகையில்,

எங்கள் குடும்பத்துக்குள் 3 பிரிவாக இருந்த பங்குகளை ஒரு தரப்பிடம் (கார்த்திக்கிடம்) தந்துள்ளோம். இந்தப் பங்குகளைவாங்க கார்த்திக் வெளிநாட்டு வங்கியில் முறையான ஆவணங்கள், உத்தரவாதங்களைக் காட்டி கடன் பெற்றார். உத்தரவாதம்இருந்ததால் தான் அவருக்கு கடன் தந்துள்ளார்கள். இதில் நிதியமைச்சகத்தின் தலையீடெல்லாம் இல்லை என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X