For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரை கடக்கும் முன் வலுவிழந்தது புயல்: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Nellai
தென்மேற்கு வங்க கடலில் பாம்பன் அருகே மையம் கொண்டிருந்த புயல் நேற்றிரவு வலுவிழந்தது. ஆனாலும் மேலும் 2நாட்களுக்கு மழையும் சூறாவளி காற்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாம்பனில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்ததில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த புயல்தூத்துக்குடிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்அறிவித்தது.

ஆனால், கரையைக் கடக்கும் முன்னரே நேற்று இரவு புயல் வலுவிழந்தது. இதனால் புயல் கரையை கடக்காது என்றும் அதேநேரத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழையும், பலத்த காற்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்,கடல் கொந்தளிப்பு தொடர்ந்து நீடிக்கும்.

எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Madurai Tiruparankunram
மேலும் வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் அடை பெய்தது. சென்னை, நாகை,திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்தது.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்பகிறது. இதேபோல் வேதாரண்யத்திலும் பலத்த சூறாவளிக் காற்றுடன், கடல் கொந்தளிப்பும் ஏற்படுகிறது.

வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக தமிழக கடற்கரையோர கிராமங்களில் பலத்த மழை கொட்டியது. நாகை,திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கிறது.

நாகையில் கரையை கடக்க வேண்டிய புயல் தூத்துக்குடியை நோக்கி நகர்ந்ததால் நாகை தப்பியது. ஆனால் நாகையில் பலத்தமழை பெய்ததாலும், கடலில் கொந்தளிப்பு உள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்மீனவர்கள் தொடர்ந்து 4வது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

வேதாரண்யத்தில் தொடர் மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. கடல் கொந்தளிப்பும் அவ்வப்போது ஏற்பட்டது.கடற்கரையொட்டியுள்ள பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மேலும் இந்த பகுதியில் உள்ள வீடுகளின் ஓடுகள் சூறாவளிக் காற்றால் பறந்து சென்றன. மின் கம்பங்கள் சரிந்தன. இதனால்வேதாரண்யத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

Water in Madurai Meenakshi temple
தஞ்சை மாவட்டத்திலும் நேற்று 3வது நாளாக மழை கொட்டியது. ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த அடைமழையால் சம்பா பயிர் பெரும் சேதத்துக்கு உள்ளானது. இப்போது மீண்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்நாசமடைந்துள்ளன.

பட்டுக்கோட்டை, அதிராம் பட்டிணம், சேதுபாவா சமுத்திரம், மல்லிபட்டினம், ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழைகொட்டியது. சேதுபாவா சமுத்திரம், புதுப்பட்டினம், காரங்குடா, கழுமங்குடா ஆகிய கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. கடற்கரை பகுதிகளான மீமிசல், ஜெகதா பட்டினம்,கோட்டைபட்டினம் மற்றும் அறந்தாங்கி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. உசிலங்குளம் பதியில் உள்ள தேன்குளம் நிரம்பி பக்கத்தில் உள்ள காந்தி நகருக்குள் தண்ணீர் புகுந்தது.

மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் நேற்று அதிகாலை துவங்கிய மழை விடாது பெய்ததால் தண்ணீர்தேசம் ஆனது. மதுரையில் கர்டர் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டது.

இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.ராமநாதபுரம்மண்டபம் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ராமேசவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்த 40 அடி உயரமுள்ள ஒரு மரம்இரண்டாக ஒடிந்து விழுந்தது.

Chennai
கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து மழை காரணமாக அதிகமாக வந்துகொண்டிருக்கிறது.

பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தண்ணீர்ர் தொட்டி கனமழையால்நேற்று இடிந்தது. இதில் அம்சவல்லி (வயது 38), ஜெகதீஸ்வரி (வயது 18) ஆகிய இருவரும் சிக்கி கொண்டனர்.

படுகாயமடைந்த அம்சவல்லி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். ஜெகதீஸ்வரி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை:

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதைதொடர்ந்து அமராவதி அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இன்று வினாடிக்கு75,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

அமராவதி அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டம் செட்டிபாளையம் அணைக்கு வந்து அங்கிருந்துகருப்பம் பாளையம், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், பசுபதிபாளையம், சோமூர் வழியாக திருமுக்கூடலூர் என்றஇடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

எனவே இந்த பகுதிகளில் வெள்ள அபாயம் விடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி:

இதற்கிடையே பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. 120 அடி கொள்ளவு கொண்ட அந்தஅணையில் தற்போது 117 அடி தண்ணீர் உள்ளது.இந்த அணையும் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். சின்னாறுகிராமத்தில் உள்ள ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் மிதந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X