மாணவர்களின் கையை தீயால் சுட்ட ஆசிரியை !!!
சென்னை:
தூத்துக்குடி அருகே ஒரு பள்ளியில் பணத்தை திருடியதாக மாணவர்களின் உள்ளங்கையை, மெழுகுவர்த்தியால் சுட்ட பள்ளிதலைமை ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவர் உஷாபார்வதி. இவர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தாவிடம் சென்று, நான் மதிய உணவுக்கு சென்று திரும்பிய நேரத்தில்என்னுடைய கைப்பையில் வைத்திருந்த சம்பள பணத்தில் இருந்து ரூ.200 காணவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட தலைமை ஆசிரியை, உடனே அவருடைய வகுப்புக்கு வந்து மாணவர்களுக்கு பல அறிவுரைகளைவழங்கியுள்ளார். இதை தொடர்ந்து மெழுகுவர்த்தியை கொண்டுவரச் சொல்லி வகுப்பில் இருந்த 35 மாணவர்களையும் அந்தநெருப்பின் மீது உள்ளங்கை வைத்து தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க சொல்லியிருக்கிறார்.
இதில் 6 மாணவர்களின் உள்ளங்கையில் நெருப்பு பலமாக சுட்டுவிட்டது. மீதி மாணவர்கள் சிறிய காயத்துடன் தப்பித்துவிட்டனர்.வீட்டுக்கு சென்ற மாணவர்கள் உள்ளங்கையில் ஏற்பட்ட தீ காயத்தால் அழுது துடித்துள்ளனர். உடனே இந்த சம்பவம் குறித்துகேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடம் முன்பு ஒன்று திரண்டு மாணவர்களை துன்புறுத்திய தலைமைஆசிரியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து மாணவர்களை துன்புறுத்திய குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரகமும் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடைய ஆசிரியை உஷா பார்வதி காணாமல் போனதாக சொன்ன ரூ.200 பள்ளி கழிப்பறை அருகே கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் அகர்வால்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |