For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்சென்னை வெள்ளச்சேத பகுதிகளில் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சென்னை புறநகர்ப்பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்றுபார்வையிட்டார்.

சென்னை அடையாறு, திருவான்மையூர், கொட்டிவாக்கம் வழியாக வெட்டுவாங்கேணி சென்றார். இங்கு சமீபத்தில் பெய்தமழைக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. அங்கு வசித்த மக்கள் 1,200 பேர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாமில்தங்கவைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ஆறுதல் கூறி பேசினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

வரலாறு காணாதவகையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் 22 மாவட்டங்கள் 4 முறை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.இதுவரை இது போல் வெள்ளச் சேதத்தை கண்டது இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீங்கள் வசிக்கும் வீடுகளைஇழந்து நிவாரண முகாமான இங்கு தங்கவைக்கப்பட்டு இருக்கிறீர்கள். எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில்இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலை ஏற்படும்.

அவற்றை எல்லாம் செய்து கொடுக்க எனது அரசு இருக்கிறது. உங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது கடமை எனசெயல்பட்டு வருகிறோம். எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். முழுமையாக வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2,000,10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும்.

இதுவரை உதவி தொகை பெறாதவர்களும் இதை பெற்றுக் கொள்ளலாம். பள்ளி குழந்தைகள் பலரது பாடபுத்தகங்கள் தண்ணீரில்வீணாகிவிட்டன. யார் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அவர்களுக்கெல்லாம் இலவசமாக பாடப்புத்தகங்கள்வழங்கப்படும்.

ரேஷன் கார்டு இழந்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். தற்போது ரேஷன் கார்டு இருந்தாலும்இல்லாவிட்டாலும் உங்களுக்கு நான் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் முழுமையாக அளிக்கப்படும். மீண்டும் எதிர்காலம் பற்றிகவலைப்பட வேண்டாம். உங்களை பாதுகாக்க தமிழக அரசு உள்ளது என்று கூறினார்.

அதன்பிறகு ஜெயலலிதா ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஆறுதல் கூறிபேசினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் சோளிங்கநல்லூர் புனித தோமையர் மலைதொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் சென்று அங்குள்ள மக்களிடம் நிவாரண உதவிகள் வழங்க பேசினார்.

முன்னதாக சோளிங்க நல்லூர் பங்கிங்காம் கால்வாய் பாலத்தில் நின்று வெள்ளத்தை பார்வையிட்டார். அந்த பாலம் குறுகியதாகஇருப்பதால் தான் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து விட்டது. அங்கு புததாக பெரிய பாலம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வேனில் சென்று பார்வையிட்டார். பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில்கூடியிருந்த மக்களைப் பார்த்ததும் வேனை நிறுத்தி அவர்களத குறைகளை கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சரியான நிவாரணம் அளிக்கப்படும் என உறுதியளித்தார். தேவைப்பட்டால் நிவாரண உதவிக்காக பிரதமரை சந்திப்பதாகவும் அவர் கூறினார்.

வெள்ளச்சேத பகுதியில் அமைச்சர் வளர்மதி:

கடந்த வாரம் பெய்த மழையினாலும், செம்பரம்பாக்கம் ஏரி, குளங்கள், மதகுகள் திறந்துவிடப்பட்டதாலும் அடையாறு ஆற்றில்வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றின் ஓரம் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது.

உடனே தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.வளர்மதி நந்தம்பாக்கம், ராமாபுரம், அம்மன் நகர், நெசப்பாக்கம்,பாலாஜிநகர், சூளைப்பள்ளம், எம்ஜிஆர் நகர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். நெசப்பாக்கத்தில்அனைத்து தெருக்களிலும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி மேடான பகுதிக்கு வந்தனர். அவர்களைபாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கவும் அமைச்சர் வளர்மதிஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காடுவெட்டியிலிருந்து திருவேற்காடு செல்லும் தரைப்பாலம்வெள்ளத்தில் முழ்கியது. வேலப்பன்சாவடியிலிருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலமும் மூழ்கியது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் டி.ஆர்.பாலு:

சென்னையை அடுத்த தாம்பரம் சிபிஓ காலனி, ஹரிதா என்கிலேங், புளுஜாக்கர் பகுதிகளில் ஏராளமான வீடுகள் வெள்ள நீரில்மூழ்கின. இந்த பகுதிகளை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சுற்றிப்பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

சேலையூர் அருகே அகரம் தென் ஊராட்சியில் அகரம், வெங்கம்பாக்கம், முத்தமிழ்நகர், செந்தமிழ்நகர், கஸ்பாபுரம், பாரதிதாசன்நகர், சுத்தானந்த பாரதிநகர், எம்ஜிஆர் நகர், ஜே.ஜே நகர் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் அப்பகுதியை சேர்ந்த 2,000 பேர்பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

முடிச்சூர் சாலையில் வெள்ள நீர் வடிந்ததால் போக்குவரத்து தொடங்கியது. தாம்பரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில்தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க ஆணையாளர் லியாகத் அகமது பாப்பா தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X