For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் தமிழகம் முழுவதும் தொடர்கிறது கன மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் உருவாகி வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ஃபனூஸ் புயல் வலுவிழந்த நிலையில் தென் தமிழகத்தின் மீதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்கள் முழுவதுமே கடந்த இரு நாட்களாகபலத்த மழை தொடர்ந்து வருகிறது.

இதனால் பல தென் மாவட்ட ஆறுகளில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம்,திருநெல்வேலி, தூத்துக்குடியில் மிக மிக பலத்த மழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை இரவு அடை மழை பெய்து ராமநாதபுரம் மாவட்டத்தையே நிலை குலைய வைத்தது. சூறைக்காற்றும் அதிகமாகஇருந்ததால், ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பல ஊர்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.

கலெக்டர் பங்களா, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் வீடு உள்ளிட்ட முக்கியப் பிரகர்களின் வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. பல இடங்களில் மின் கம்பங்களும் கீழே விழுந்தன. இவற்றை உடனுக்குடன் அதிகாரிகள் சரிசெய்தனர்.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மின் வினியோகம் இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தின்150க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கீழக்கரை, தொண்டி, கடலாடி, தேவிப்பட்டனம், ராமேஸ்வரம், ஏர்வாடி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. பிரபலமான திருஉத்திரகோசை மங்கை கோவிலும் மழை வெள்ளத்திற்குத் தப்பவில்லை.

தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக கோவிலின் அக்னி தீர்த்த குளம், பிரம்ம தீர்த்த குளம் ஆகியவை நிரம்பி வழிகின்றன.அதிலிருந்து வெளியான உபரி நீர் வெள்ளம் போல கோவிலுக்குள் பாய்ந்தது. கோவிலின் பல சன்னிதிகளில் முட்டி அளவுக்குதண்ணீர் நின்றதால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

நெல்லையில் கொட்டிய கன மழை காரணமாக பஸ் நிலையம், பாளையங்கோட்டை, அண்ணா நகர், பாலபாக்கிய நகர் உள்ளிட்டபல பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. தென்காசியிலும் கன மழை பெய்தது. இதனால் குற்றாலநீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் போல தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் அதிக அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற அருவிகளிலும் கூட அதிக அளவில் வெள்ளப் பெருக்கு காணப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் அதிக அளவாக 12 செ.மீ. மழை பெய்தது.

குமரி மாவட்டத்திலும் பரவலாக கன மழை பெய்துள்ளது. பல தெருக்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்களின்இயல்பு நலை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

மதுரையிலும் சனிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய மழை பெய்தது. இதனால்வழக்கம் போல மதுரை பெரியார் பஸ் நிலையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தேனி அருகேவருசநாடு பகுதியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

அதே போல கொடைக்கானல்-பழனி இடையிலான மலைப் பாதையில் மழை காரணமாக நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்கொடைக்கானலின் 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.

வட மாவட்டங்களில் அவ்வளவாக மழை இல்லை. பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. லேசானமழை ஒரு சில இடங்களில் காணப்பட்டது. சென்னை நகரில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.

தென் மாவட்டங்கள் முழுவதும் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்னும் விலகாமல் தென் மாவட்டங்கள் மீது மேகக் கூட்டமாக வியாபித்துள்ளதால் மழைநீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மேகக் கூட்டம் தொடர்ந்து மேற்கு நோக்கி நகரும் எனவும், அப்படி நகர்ந்து அரபிக் கடல் பக்கம் போய் விட்டால்தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

அதே போல சென்னையைச் சுற்றி மழை பெய்து வருவதால் நகருக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழாவரம்,போரூர், பூண்டி ஆதிய ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

போரூர் ஏரி எந்த நிமிடமும் நிறைந்துவிடும் நிலையில் உள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளவுக்கு 2 அடி மட்டுமே நீர்குறைவாக உள்ளது. தொடர்ந்து நீர் வந்து கொண்டிருப்பதால் அதுவும் எப்போது வேண்டுமானாலும் நிறையும் நிலை. பூண்டி,செம்பரம்பாக்கமும் நிறைந்து போய் நிற்கின்றன.

மழை தொடர்ந்தால் இந்த ஏரிகளை திறந்தாக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது கூவம், அடையாறு ஆறுகளில் மீண்டும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் வரலாம்.

அதே போல திருச்சி, ஈரோடு, கோவை, தர்மபுரி, சேலம், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகியபகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டையில் சூறாவளி:

இதற்கிடையே புதுக்கோட்டை அருகே வீசிய சூறாவளிக் காற்றில் 20 விசைப் படகுகள் மூழ்கின.

ஜகதாம்பட்டணம் பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்தப் படகுகள் சூறாவளிக் காற்று வீசியதால் கவிழ்ந்தன.மேலும், 50 விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X