For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி வீட்டில் கேக் வெட்டிய காங்: திண்டிவனம் கோபம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு கேக்கை எடுத்துப் போய் இளைஞர் காங்கிரஸார்வெட்டி மகிழ்ந்தது கடும் கண்டனத்துக்குரிய செயல் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.

கருணாநிதிக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள ராமமூர்த்தி, அவரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.இதுதொடர்பாக திமுகவினர் காங்கிரஸ் மேலிடத்தில் முறையிட்டதன் விளைவாக, திண்டிவனம் ராமமூர்த்திக்கு கட்சி மேலிடம்நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸுக்கு உரிய பதிலை அனுப்பி விட்டதாக கூறியுள்ள திண்டிவனம் மீண்டும் கருணாநிதியை விமர்சித்துள்ளார்.இம்முறை அவரது வாயில் இளைஞர் காங்கிரஸாரும் சேர்ந்து விழுந்துள்ளனர்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழக இளைஞர் காங்கிரஸார், அப் பிரிவின்தலைவர் விஷ்ணு பிரசாத் தலைமையில், 59 கிலோ எடை கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வடிவிலான கேக்கை கருணாநிதியின்கோபாலபுரம் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அந்த கேக்கை கருணாநிதி வெட்டினார்.

எப்படியோ உங்க பதவி போகப் போகுது என்று விஷ்ணு பிரசாத்திடம் சொல்லியபடி தான் கேக்கை வெட்டினார் கருணாநிதி.

இதை திண்டிவனம் ராமமூர்த்தி கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், கருணாநிதி வீட்டில் போய் கேக் வெட்டி சோனியா காந்தியின்பிறந்த நாளை இளைஞர் காங்கிரஸார் கொண்டாடியுள்ளனர். இதை ஊரே கேலி பேசுகிறது, பத்திரிக்கைகளிலும் கிண்டலாகசெய்திகள் வருகின்றன.

காங்கிரஸ்காரர்களுக்கென்று சுய மரியாதை உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் வைத்து அந்த கேக்கை வெட்டியிருக்கலாம். அல்லதுகாங்கிரஸ்காரர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று வெட்டியிருக்கலாம். அதை விடுத்து கருணாநிதி வீட்டுக்கு கேக்கைக் கொண்டுபோய் அவரை வெட்ட வைத்தது தவறான செயல்.

காமராஜர் காலத்தில் காங்கிரஸ்காரர்களிடம் சுய மரியாதை இருந்தது. இப்போது அதை காங்கிரஸ்காரர்களிடம் எதிர்பார்க்கமுடியவில்லை. தங்களது காரியத்தை சாதிக்க வேண்டுமானால் எங்கே போக வேண்டும் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சியே இந்தகேக் வெட்டும் நிகழ்ச்சி.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்கள், தங்களையும்,வீட்டையும் காத்துக் கொள்ள காமராஜர் நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஜெயலலிதா நகர் என்று பெயர் வைப்பார்கள்.அந்தந்த சமயத்தில் இருக்கும் ஆட்சிக்கேற்ப இந்த பெயர் வைக்கும் வைபவம் நடைபெறும்.

காரியத்தை சாதித்துக் கொள்ளவே இம்மாதிரி பெயர் வைப்பார்கள். அதுபோலத்தான் இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியும். இதைத்தவிர்த்திருக்க வேண்டும். இதுபோன்றவர்கள் கட்சியில் இருப்பது கட்சிக்கு நல்லதல்.

நான் திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் பேசி வருவதற்கு கட்சியில் நல்ல ஆதரவு உள்ளது. இன்று காலை கூட திண்டுக்கல்,போடியில் இருந்து தொண்டர்கள் என்னுடன் போனில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார்கள். எனது பேச்சில், செயலில் நியாயம்இருப்பதாகவே அனைவரும் கூறுகிறார்கள்.

நான் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடப் போனால் கூட என்னை பாராட்டித்தான் பேசுகிறார்கள். அனைவருக்குமே எனதுபேச்சின் நியாயம் புரிந்திருக்கிறது.

இன்று 120 சட்டசபைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. அதைத்தான் நான் சுட்டிக் காட்டிப்பேசுகிறேன். தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.

எனக்கு நோட்டீஸ் வந்துள்ளதால் நான் பயந்து விட மாட்டேன். அதற்குரிய பதிலை அனுப்பி விட்டேன். திட்டமிட்டபடிமாவட்டம்தோறும் சென்று காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பேன். இப்போது மழை வெள்ளமாக இருப்பதால் போகவில்லை.முடிந்ததும் போவேன்.

ஸ்டாலினை அழைத்து காங்கிரஸார் கூட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார்கள். அந்த உணர்வை நான் தடுத்து நிறுத்துவேன்.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்தை நான் தடுத்து நிறுத்த முயற்சிக்க மாட்டேன். அது அடியாட்களை வைத்து மிரட்டும் செயல்,என்னிடம் அடியாட்கள் இல்லை, தொண்டர்கள் மட்டுமே உள்ளனர் என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X