For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிவாரண நிதி: பிரதமருடன் ஜெ. சந்திப்பு- தமிழக மத்திய அமைச்சர்கள் மீது பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக ரூ. 13,685 கோடியை ஒதுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கைமுதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு முடிந்தவரை அனைத்து உதவிகளும்செய்யவதாக பிரதமர் உறுதியளித்தார்.

அதே நேரத்தில், மாநிலத்துக்கு உரிய நிதியை தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும் பெற்றுத் தரத் தவறி விட்டதாகஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேல் பெய்த கன மழை, புயல் தாக்குதல், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்உடைப்பு, அணைகள் நிரம்பி வழிந்தது ஆகியவற்றின் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்ச்சேதம், பொருள்இழப்பு, 400க்கும் மேற்பட்ட உயிரிழப்பு என தமிழகமே சிதிலமடைந்து விட்டது

தமிழகத்தின் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் முற்றிலும் சீர்குலைந்து போய்க் கிடக்கின்றன. மழை வெள்ள சேதம் குறித்துப்பார்வையிட மத்திய அரசு 2 முறை மத்திய குழுவை அனுப்பி வைத்தது.

அவர்களும் ஆய்வு செய்து விட்டுப் போனார்கள். நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ. 13,000 கோடி தர வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வெறும் 500 கோடியுடன் நிறுத்திக் கொண்டது மத்தியஅரசு.

கூடுதல் நிதி கேட்டும் இதுவரை ஒரு சத்தத்தையும் காணோம். இந் நிலையில் இன்று காலை டெல்லி வந்த ஜெயலலிதா,நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். இச் சந்திப்பின்போது தலைமைச்செயலாளர் நாராயணனும் உடனிருந்தார்.

அப்போது பிரதமரிடம் தமிழகத்திற்கு உடனடியாக நிவாகண நிதியை ஒதுக்குமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். பின்னர்செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகத்தில் இந்த நூற்றாண்டில் பெய்யாத அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இதனால் மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்புமுழுமையாக சீர்குலைந்துவிட்டது. தமிழகத்திற்கு உடனடியாக ரூ. 13,685 கோடி நிதியை வழங்க உத்தரவிட வேண்டும் என்றுபிதரமரிடம் கேட்டுக் கொண்டேன்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை மனு அனுப்பினேன். ஆனால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.வெறும் ரூ. 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இது போதாது. எனவேதான் நேரில் வந்து பிரதமரிடம்வலியுறுத்தியுள்ளேன்.

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் என்ன பிரயோஜனம்? தமிழக வெள்ளநிலைமை குறித்து அவர்கள் அக்கறை காட்டவில்லை. உரிய நிதியைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்ஜெயலலிதா.

இச் சந்திப்புக்குப் பின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகபிரதமர் உறுதியளித்தார். நிதியும், நிவாரணமும் தமிழகத்துக்குச் சென்றடைவதை தானே மேற்பார்வையிடுவதாகவும் பிரதமர்கூறினார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பை பிரதமர் முடித்த சில நிமிடங்களில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததுகுறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X