• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக கூட்டணிக்கு வைகோ குட்பை?

By Staff
|

சென்னை:

மதிமுக ஓ நெகடிவ் ரத்தம் மாதிரி, அது எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர முடியும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோகூறினார்.

திமுக கூட்டணியில் தனது கட்சிக்கு மரியாதை இல்லை என்ற கோபத்தை இதுவரை அடக்கி வைத்து வந்த வைகோ சமீபகாலமாகஅதை வெளிக் காட்ட ஆரம்பித்துள்ளார். இதுவரை நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த திமுக-மதிமுக மோதல் வெளிச்சத்துக்கு வரஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் சென்னையில் நடந்த மதிமுக ரத்ததான முகாம் விழாவில் திமுக தலைவர் கருணாநிதியை மிகக் கடுமையாகஅர்ச்சித்து முன்னாள் திமுக எம்.பி. கலாநிதி பேசினார். அதில் பேசிய இயக்குனர் சேரன் மதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும்என்றார்.

இவர்களது பேச்சுக்கு பதிலளித்துப் பேசிய வைகோ, மதிமுக ஓ நெகடிவ் ரத்தம் மாதிரி, அது எந்த குரூப்புடனும் (கூட்டணி)இணைந்து போக முடியும் என்றார்.

இதனால் திமுக கூட்டணியை விட்டு விலகவும் தான் தயார் தான் என்பதை வைகோ மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக அரசியல்வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வைகோவின் பேச்சுக்கு மதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.

மதிமுக சார்பில் நடத்தப்பட்டு வந்த ரத்ததான முகாம் நிறைவு விழா சென்னையில் நடந்தது. காமராஜர் அரங்கில் நடந்த இந்தவிழாவில் முன்னாள் திமுக எம்.பி. டாக்டர் கலாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது,

கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்தும், வைகோவை வெகுவாக புகழ்ந்தும் பேசியதால், தொண்டர்கள் மத்தியில் பெரும்வரவேற்பு காணப்பட்டது.

கலாநிதியின் பேச்ச்சு:

வைகோ 20 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஊர் திரும்பியதும்,வைகோவை யாரும் பார்க்கவோ, பேசவோ கூடாது என்று எங்களுக்கு (திமுகவினருக்கு) தடை விதிக்கப்பட்டது. ஆனால் எனதுஎதிர் வீட்டில் இருப்பவர் வைகோ. என்னால் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும், பேசாமல் இருக்க முடியும்?

அதை விட நானும், அவரும் ஒரே கொள்கைக்காரர்கள். எனவே போனால் எம்.பி. பதவிதானே போகும், பரவாயில்லை என்றுமுடிவு செய்து வைகோவைப் பார்த்தேன், அவரது மனைவியையும் பார்த்துப் பேசினேன்.

என்னைப் பார்க்கக் கூடாது என்று தடை போட்டவரே (கருணாநிதி), பின்னர் பூந்தமல்லி பொடா சிறையிலும், வேலூர் மத்தியசிறையிலும் பல மணி நேரம் காத்திருந்து வைகோவை சந்தித்தார்.

வைகோ ஒரு கட்சியில் இருந்தபோது அவருக்கு அக்கட்சியின் கதவு மூடப்பட்டது. ஆனால் மதிமுக என்ற கதவு திறந்தது.எனக்கும் அந்தக் கட்சியின் (திமுக) கதவு மூடப்பட்டபோது, மருத்துவத் துறை என்ற கதவு திறந்தே இருந்தது.

பில் கேட்ஸ் சமீபத்தில் சென்னைக்கு வந்தார். அவரது வருகையை தங்களது சுய லாபத்திற்காக சிலர் (தயாநிதி மாறன்- கருணாநிதி)பயன்படுத்திக் கொண்டனர்.

ஆனால் பில் கேட்ஸை வைகோ சந்தித்திருந்தால், தமிழகத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்குஒப்புதல் வாங்கியிருப்பார். தமிழக மக்கள் 7 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.

தம்பியின் (வைகோ) வளர்ச்சியைப் பார்த்து அண்ணன் (கருணாநிதி) பொறுமிக் கொண்டுள்ளார். தம்பிக்குக் கிடைக்கும் நல்லபெயர், செல்வாக்கு, பாராட்டைப் பார்த்து அவருக்கு இருப்புக் கொள்ள முடியவில்லை, கோபம் வருகிறது. அவருக்கு பொறாமைவந்து விட்டது.

இது மாதிரியான சமயத்தில் (தேர்தல் வரும்போது), எதையாவது செய்து, தம்பியை கொஞ்சம் தட்டிக் கொடுப்பார். எனவேவைகோ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வைகோவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்தியாவையே வழி நடத்தக் கூடிய வாய்ப்பும் வைகோவுக்கு வரும்.அரசியலில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். எனவே இப்போது போல எப்போதும் வைகோ தனது பாதையில் தொடர்ந்துநடக்க வேண்டும் என்றார் கலாநிதி.

தனது பேச்சின்போது கலாநிதி ஒவ்வொருமுறையும் கருணாநிதியை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்தபோதெல்லாம்அரங்கில் கூடியிருந்த மதிமுக தொண்டர்கள் கையொலி எழுப்பியும் விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால் அப்போதெல்லாம் சங்கடத்தில் நெளிந்த வைகோ எழுந்து, இங்கு அரசியல் பேச வேண்டாம் என்று கலாநிதியிடமும்,யாரும் கை தட்டக் கூடாது என்று தொண்டர்களிடமும் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கலாநிதியும் நிறுத்தவில்லை,தொண்டர்களும் நிறுத்தவில்லை.

தனித்து போட்டி: சேரன் அழைப்பு

இதையடுத்துப் பேசிய இயக்குனர் சேரன் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சி மூலம் வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். வரும் சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனித்துப்போட்டியிட வேண்டும். இதை நிச்சயமாக வைகோ பரிசீலனை செய்ய வேண்டும்( சேரன் இவ்வாறு கூறியதும், அரங்கில்கூடியிருந்த மதிமுக தொண்டர்கள் கையொலி எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர். வைகோவோ நெளிந்து தவித்தார்).

வைகோ மற்ற தலைவர்கள் போல இல்லை. தன்னலமற்ற, சுயநலமற்ற ஒரு மனிதர். தன்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் தொகுதிமக்களுக்காக சமூகத் தொண்டாற்றும் அரசியல் தலைவர்கள் இன்று யாரும் இல்லை. ஆனால் வைகோ பெரும் சேவை புரிந்துவருகிறார்.

எம்.பியாக இல்லாதபோதிலும் கூட தனது தொகுதி மக்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வைகோ செய்து வரும் பணிகள்மிகத் தூய்மையானவை, அரசியல் கலப்பற்றவை.

மதிக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு மருத்து சேவைகள் குறித்த படக் காட்சியை நான் பார்த்தேன். பிரமித்துப் போன்ே. இந்தபடக்காட்சியை தேர்தலின்போது மக்களுக்குப் போட்டுக் காட்டினால் மதிமுகவின் சேவையை மக்கள் புரிந்து கொள்வார்கள்.மதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.

எனது தவமாய் தவமிருந்து படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ தனதுதொண்டர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் சேரன்.

வைகோ பேச்சு:

இதையடுத்துப் பேசிய வைகோ, நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும் மறைமுகமாகப் பேசினார்.

எய்ட்ஸ் நோய்தான் இன்று உலகையே பயமுறுத்தும் மிகப் பெரிய நோயாக உள்ளது. தமிழகத்தில்தான் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம்உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எய்ட்ஸ் கிருமிகள் இல்லாத ரத்தம் இன்று எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அதற்காகவே இந்த ரத்ததான முகாம். இதைஇணையதளம் மூலமும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்காக இணையதளம் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.

ரத்தம் தேவைப்படுவோர் இந்த இணைய தளம் மூலம் மதிமுகவைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பின்னர், மதிமுக ஓ நெகடிவ் ரத்தம் மாதிரி, அது எந்த குரூப்புடனும் கூட்டு சேர முடியும். நான் சொல்வதை சரியான அர்த்தத்தில்எடுத்துக் கொள்ளுங்கள் என்றபோது அரங்கத்தில் இருந்த மதிமுக தொண்டர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.

இந் நிகழ்ச்சியில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், இந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் மதிமுக நடத்திய ரத்ததான முகாம்கள் மூலம் 80,000 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. ரத்ததானம் செய்த மதிமுக தொண்டர்களுக்கு பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாச்சலம்சான்றிதழ்களை வழங்கினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X