For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அமைச்சரானார் ஜி.கே.வாசன்: அய்யர் இலாகா பறிப்பு- இளங்கோவன் இலாகா மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மத்திய இணை அமைச்சராக இன்று பதவியேற்றார். வர்த்தகத் துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடமிருந்து அந்த இலாகா பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறை மணிசங்கர அய்யரிடமிருந்துபறிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் இன்று பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. 10 புதிய கேபினட் அமைச்சர்களும், 11 இணைஅமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதன் படி மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ள சுஷில் குமார் ஷிண்டே, ஏ.ஆர்.அந்துலே, வயலார் ரவி, முரளி தியோரா,அம்பிகா சோனி, சைபுதின் சோஸ், சிபுசோரன் ஆகியோர் புதிய கேபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிரதற்போது இணை அமைச்சர்களாக உள்ள சந்தோஷ் மோகன் தேவ், பிரேம் சந்த் குப்தா, கபில் சிபல் ஆகியோர் கேபினட்அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பவன்குமார் பன்சால், சுப்பராமி ரெட்டி, அனந்த் சர்மா, அஜய் மக்கான், பல்லம் ராஜு, சந்திரசேகர் தாகூர், புரந்தரேஸ்வரி(என்.டி.ராமாராவின் மகள்), ஜெயராம் ரமேஷ், அஸ்வின் குமார், தீன்ஷா பட்டேல் ஆகியோர் இணை அமைச்சர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகநியமிக்கப்பட்டுள்ளார்.

22 பேருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கேபினட் அமைச்சர்களில் முரளி தியோராவுக்கு பெட்ரோலியம், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு மின்சாரம், சிபுசோரனுக்குநிலக்கரி, அம்பிகா சோனிக்கு சுற்றுலா, அந்துலேவுக்கு சிறுபான்மையினர் நலம், வயலார் ரவிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்,மணிசங்கர அய்யருக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை, சைபுதீன் சோஸுக்கு நீர்வளம், ரேணுகா சவுத்ரிக்கு மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இணை அமைச்சர்களில் ஜி.கே.வாசனுக்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை, பவன் குமார் பன்சாலுக்கு நிதி, அஜய்மக்கானுக்கு நகர்ப்புற வளர்ச்சி, பல்லம் ராஜுக்கு பாதுகாப்பு, புரந்தரேஸ்வரிக்கு மனித வள மேம்பாடு ஆகிய துறைகள்ஒதுக்கப்பட்டுள்ளன.

மணிசங்கர அய்யர் இதுவரை வைத்திருந்த பெட்ரோலியத் துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வைத்திருந்த வர்த்தகத் துறை பறிக்கப்பட்டு ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆஸ்கர் பெர்னாண்டஸ், தின்ஷா பட்டேல், சுப்பராமி ரெட்டி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இலாகா இல்லாத இணைஅமைச்சர்களாக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ந்துள்ள ஜி.கே.வாசனையும் சேர்த்து, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழக அமைச்சர்களின்எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் விவரம்:

ப.சிதம்பரம், தயாநதி மாறன், அன்புமணி ராமதாஸ், ஆர்.வேலு, டி.ஆர்.பாலு, மணிசங்கர அய்யர், ராஜா, ஜி.கே.வாசன்,ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வெங்கடபதி, பழனிமாணிக்கம், ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர். இவர்களில் முதல் 7பேர் கேபினட் அமைச்சர்கள், மற்றவர்கள் இணை அமைச்சர்கள் ஆவர்.

அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்:

மீண்டும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சூசகமாக தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு ராஷ்ட்ரபதி பவனில் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங்கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு மேலும் தமது அமைச்சரவையில் விஸ்தரிப்பு இருக்கும் என்றுதெரிவித்தார். தற்போது வெளியுறவுத் துறை தமது வசம் உள்ளதாகவும், இந்த துறைக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகுஅமைச்சர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார்.

இதனால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X