For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புஷ் இன்று வருகை: நாடு முழுவதும் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இன்று இரவு டெல்லி வருகிறார். இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புஷ்ஷின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கார்த்திகின் பார்வர்ட் பிளாக் சார்பிலும் புஷ் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அதிபர் புஷ்சுடன் அவரது மனைவி லாரா மற்றும் உயர் மட்டக் குழுவினரும் இன்று இந்தியா வருகின்றனர்.

மெளரியா ஷெரட்டன் ஹோட்டலில் தங்கும் புஷ், நாளை காலை ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று அப்துல்கலாமை சந்திப்பார். அங்கு புஷ்சுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும்அளிக்க்பபடும்.

பின்னர் ராஜ்காட் செல்லும் புஷ், அங்கு மகாத்மாக காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்துவார். இதைத் தொடர்ந்துஹைதராபாத் ஹவுஸ் விருந்தினர் மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கை புஷ் சந்தித்துப் பேசுவார்.

பின்னர் தாஜ் பேலஸ் ஹோட்டலில் புஷ்சுக்கு சிங் மதிய விருந்தளிக்கிறார். மாலையில் ஜனாதிபதி கலாம்,புஷ்சுக்கு விருந்தளிப்பார். இதைத் தொடர்ந்து புஷ்ஷை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசுவார்.

3ம் தேதி ஹைதராபாத் செல்லும் புஷ் அங்குள்ள பியர்ல் சிட்டியில் உள்ள என்ஜி ரங்கா விவசாயப்பல்கலைக்கழகத்திலும், சர்வதேச பிசினஸ் ஸ்கூலிலும் நடக்கும் இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

அன்று மாலையே டெல்லி திரும்பும் புஷ், முக்கிய பிரமுகர்களிடையே உரையாற்றுகிறார்.

4ம் தேதி காலை அவர் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர், வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் புஷ் பல்வேறு சர்வேதச விவகாரங்கள்,தீவிரவாத ஒழி"பபு, காஷ்மீர் பிரச்சனை, ஆப்கானிஸ்தான் விவகாரம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்குஇடம் கொடுப்பது, ஆயுத ஒப்பந்தம், இந்திய அணு மையங்களை சர்வதேச அணு ஆராய்ச்சிக் கழகத்தின்மேற்பார்வையில் கொண்டு வருவது, பொருளாதார ஒப்பந்தம் ஆகிய விவகாரங்கள் குறித்து விரிவாகஆலோசனை நடத்தவுள்ளார்.

புஷ்சுக்கு எதிராக போராட்டம் நடத்த இடதுசாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால்டெல்லியும் ஹைதராபாத்திலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

அல்-கொய்தாவின் ஹிட் லிஸ்டில் இருக்கும் மிக முக்கியமான உலகத் தலைவர் புஷ் என்பதால் விமான நிலையம்தொடங்கி, அவர் தங்கும் இடம், போகும் இடம் எல்லாம் இந்திய பாதுகாப்புப் படையினருடன் அமெரிக்கக்கமாண்டோக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்திய உளவுப் பிரிவினரும் அமெரிக்க உளவுப் பிரிவினரும், இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவினரும் ஏராளமான எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புஷ்சின் வருகையையொட்டி காஷ்மீரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அங்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏர்-போர்ஸ் ஒன் என்ற அதிபருக்கான சிறப்பு போயிங் விமானத்தில் இந்தியா வரும் புஷ்சுக்காக அமெரிக்கராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் முன்பே டெல்லி வந்திறங்கிவிட்டன. அவற்றில் 5 ஹெலிகாப்டர்கள்தைராபாத்துக்கும் சென்று விட்டன.

டெல்லியில் இருந்து தனது விமானத்தில் ஹைதாராபாத் செல்லும் புஷ், ராணுவ ஹெலிகாப்டரில் தான் விழாநடக்கும் இடத்துக்குச் செல்கிறார்.

டெல்லி, ஹைதாராபாத்தில் புஷ் வந்திறங்கும்போது இந்திய விமானப் படையினர் போர் விமானங்கள் வானில்கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளன. அதே போல ஹெலிகாப்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.

புஷ் செல்லும் பாதை முழுவதும் எலெக்ட்ரானிக் ஜாமர்கள் கொண்ட வாகனங்கள் முன்னால் செல்லும்.இதன்மூலம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய முடியும்.

அமெரிக்க மோப்ப நாய்ப் படைகள், வெடிகுண்டு நிபுணர்களுடன், ராணுவ சாட்டிலைட் தொலைத் தொடர்புப்பிரிவினரும் இந்தியா வந்துள்ளனர்.

வழக்கமாக இந்தியா வரும் உலகத் தலைவர்கள் பெங்களூருக்கும் வந்து சாப்ட்வேர் நிறுவன அதிபர்களுடன்ஆலோசிப்பது வழக்கம். ஆனால், இம்முறை பெங்களூர் தவிர்க்கப்பட்டுவிட்டது.

கர்நாடகத்தில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் நிலையும் பெங்களூர் போக்குவரத்து நெரிசலும் இதற்குக் காரணம்என்று கூறப்படுகிறது.

சென்னையில் போராட்டம்:

இதற்கிடையே, புஷ்ஷின் இந்திய வருகையை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மன்ரோ சிலை முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொலைகாரன் புஷ்ஷே திரும்பிப் போ, முஸ்லீம்களை அழிக்கும் புஷ்ஷே இந்தியாவுக்குள் நுழையாதே என்று அவர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் மன்ரோ சிலையிலிருந்து ஊர்வலமாக அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் இன்று புஷ்ஷை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜார்ஜ் புஷ்ஷை உரையாற்ற வைக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அதை அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டன. இதையடுத்து அத் திட்டம் கைவிடப்பட்டது.

இந் நிலையில் புஷ்ஷை எதிர்த்து நாளை நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக் கட்சியின் எம்பிக்களான நிலோத்பத் பாசு, ரூப்சந்த் பால் ஆகியோர் கூறுகையில், ஜார்ஜ் புஷ் ஒரு வேண்டாத விருந்தாளி. இவர் நம் நாட்டுக்குள் வருவதே நமக்கு அசிங்கம். புஷ்சின் இந்த தேவையில்லாத வருகை குறித்து விவாதிக்க நாளை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்யுமாறு கேட்கப் போகிறோம்.

டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் தொடங்கி நாடாளுமன்றம் வரை இடதுசாரிக் கட்சிகளின் பிரமாண்டமான புஷ் எதிர்ப்புப் பேரணி நடக்கும். நாடாளுமன்றத்துக்குள் எங்களுடன் திமுக, லாலு கட்சியினரும் புஷ் எதிர்ப்பு குரல் கொடுக்கவுள்ளனர் என்றனர்.

இராக்கிற்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டதை திமுக தலைவர் கருணாநிதி எதிர்த்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X