For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இ.கம்யூக்கு 10 சீட்-தா.பா வேண்டாவெறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணியில் முதல் தொகுதிப் பங்கீடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மதிமுக கிளம்பிப் போய்விட்ட நிலையில் கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி,கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதில் வைகோவுக்கு அடுத்தபடியாக அதிமுக பக்கமாகப் போகத் தயாராகஇருப்பதாகக் கருதப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடுஏற்பட்டுள்ளது.

சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்தா.பாண்டியனை உளவுப் பிரிவில் உள்ள அதே சமூகத்தைச் சேர்ந்த பாண்டியனின்உறவினர் மூலமாக வளைக்க அதிமுக முயற்சித்தது.

ஆனால், அதிமுக பக்கம் கட்சி போய்விடாமல் தடுத்துவிட்டார் மூத்த தலைவரானநல்லகண்ணு.

முதல்வர் ஜெயலலிதாவுடன் எக் காரணம் கொண்டும் கூட்டணி சேரக் கூடாது, அதேநேரத்தில் நமக்குத் தேவையான தொகுதிகளை திமுகவிடம் பேசி வாங்கலாம் என்றுநல்லகண்ணு கூறி வந்தார்.

இதையடுத்து தா.பாண்டியனும் வேண்டாவெறுப்பாகவே திமுகவுடன் பேச்சுநடத்தினார்.

இந் நிலையில் நேற்று மாலை செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, மகேந்திரன்,பழனிச்சாமி எம்.எல்.ஏ. ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியுடன் இறுதிக் கட்டமாக பேசினர். அப்போது 10தொகுதிகள் தர கருணாநிதி ஒப்புக் கொண்டார். முதலில் 8 தான் தருவோம் என திமுககூறி வந்தது.

10 தொகுதிகள் ஓகே என நல்லகண்ணுவும் மகேந்திரனும் கூறிவிட்டதையடுத்துதொகுதிப்பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், தா.பாண்டியனும்கையெழுத்திட்டனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலை விட 2 தொகுதிகள் கூடுதலாக இம்முறை இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு திருப்தியாக இருக்கிறதா என்று வெளியே வந்த தா.பாண்டியனிடம்செய்தியாளர்கள் கேட்டதற்கு,

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அந்த விசாரணை எல்லாம் உங்களுக்குத்தேவையில்லை என்றார்.

தொடர்ந்து விடாத செய்தியாளர்கள் 10 தொகுதிகள்தானே ஒதுக்கியிருக்கிறார்கள்என்று கேட்டபோது, கையெழுத்துப் போட்டுள்ளோம், அவ்வளவுதான் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

திமுகவிடம் தா.பாண்டியன் 12 தொகுதிகளைக் கேட்டதாகவும், ஆனால் தர முடியாதுஎன்று திமுக தரப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.

நல்லகண்ணுவும் மகேந்திரனும் தீவிர ஜெ. எதிர்ப்பாளர்கள். தா.பாண்டியன் சசிமூலமாக அதிமுகவுடன் சேர ஆர்வம் காட்டுபவர். அதே போல பழனிச்சாமிஎம்எல்ஏவும் அதிமுக அபிமானி தான்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவாகியுள்ள முதல் கட்சி இந்தியகம்யூனிஸ்ட் கட்சிதான். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடுகையெழுத்தாகிறது.

அதேபோல பாமகவுடனும் இன்றே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X