For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங் தொழிற்சங்கத்துக்கு அதிமுகவில் 2 சீட்!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.என்.டி.யூ.சிக்கு அதிமுககூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சீட் ஒதுக்கீட்டில் தங்களது அமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ்தரவில்லை என்று கூறிவந்த ஐ.என்.டி.யூ.சி, வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குஆதரவளிக்க மாட்டோம் என அறிவித்தது.

இவர்களை பின்னால் இருந்து இயக்கியது அதிமுக தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணி ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு, அக் கட்சியுடன்பேச்சுவார்த்தை நடத்தியது.

இந் நிலையில் ஐஎன்டியூசி அமைப்பின் தலைவர் சுப்பையா, பொதுச் செயலாளர்காளன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து உடன்பாடு செய்துகொண்டனர்.

இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து ஐ.என்.டி.யூ.சிக்கு 2 தொகுதிகளை அதிமுகஒதுக்கியுள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தத்தில் ஜெயலலிதா, சுப்பையா, காளன்ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த அமைப்பையும் சேர்த்து மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 48 தொகுதிகள்கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

திண்டிவனத்துக்கு ஒன்னுரெண்டு?:

இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜய டி.ராஜேந்தர், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோருக்கு ஆளுக்கு ஒருசீட் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

திண்டிவனம் ராமமூர்த்திக்கும் ஓரிரு இடங்களே தர அதிமுக முன் வந்தள்ளது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என பெரிய கட்சிகளும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய லீக், அகில இந்திய முஸ்லீம் லீக் ஆகியகட்சிகளும் கூட்டணிக்குள் வந்துவிட்டதால் திண்டிவனம் ராமமூர்த்தி, விஜய டி. ராஜேந்தர் ஆகிய மாபெரும் அரசியல் தலைவர்களை அதிமுக பெரிதாககண்டுகொள்ளவில்லை.

தங்களை அதிமுக மறந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இந்த இரு தலைவர்களும் இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசனும் அதிமுகஅலுவலகம் சென்று அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுவுடன் தனித் தனியாக பேச்சு நடத்தினர்.

அதிமுக குழுவில் அமைச்சர்கள் ஓ.பி, ஜெயக்குமார், தளவாய், மற்றும் செங்கோட்டையன், மணியன் ஆகியோர் இடம்பெற்றனர்.

அப்போது உங்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு சீட் அம்மா தரச் சொல்லிட்டாங்க என்று குண்டைப் போட்டுள்ளனர்.

இதை டி.ராஜேந்தரும் தமிழரசனும் ஒப்புக் கொண்டுவிட்டாலும் திண்டிவனம் ராமமூர்த்தி துடித்துப் போய்விட்டாராம்.

அம்மாவுக்காக தேசியக் கட்சியான காங்கிரஸையே உடைத்தேனே என்று திண்டிவனம் பிளாஷ்பேக்கை எல்லாம் எடுத்துச் சொல்லி உணர்ச்சிகரமாகப்பேச, அப்போ அம்மாகிட்ட பேசிட்டு இன்னும் ஒன்னு ரெண்டு சேர்த்து தர்றோம் என்றதாம் அதிமுக தரப்பு.

பேச்சுவார்த்தை குறித்து திண்டிவனம் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் அன்பாக, கனிவாக, சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்ததுஎன்றார்.

திண்டிவனம் பாவம் தானே...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X