For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இண்டர்நெட் மோசடி: திருப்பூர் வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காதல் இணையதளம் அமைத்து லட்சக்ணக்கில் பணம் சுருட்டிய திருப்பூர் வாலிபர்கைது செய்யப்பட்டார்.

காதலர்களை இணைக்க இண்டர் நெட்டில் தனியாக காதல் இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. இதை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் நடப்பதுண்டு.

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த ஊனமுற்ற பெண் ஆசின்போட்டோவை தனது எனக்கூறி பல லட்சம் மோசடி செய்தார். பல மாதங்களுக்குபிறகு விசாரணையில் மோசடி செய்த பெண் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த நிருபர் ஒருவரின் மகன் ஆன்லைனில்மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் பாப்பா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). பிளஸ் 2 வரை படித்த இவர்"தோஸ் டாட் காம் என்ற இணைய தளத்தை தொடங்கினார். இதில் காதலர்கள்,நண்பர்களும் தங்கள் அன்பை பறிமாறிக் கொள்ளலாம் எனவும், இதில்உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனால் உறுப்பினர்களாக சேர்பவர்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தங்கள்கிரெடிட் கார்டுகளின் விபரத்தை இதில் தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருந்நதார்.

இதன் சூட்சுமம் அறியாதவர்கள் கிரேட் கார்டுகளின் எண்களை இணையத் தளத்துக்குஅனுப்பி வைக்கவே, அதைப் பயன்படுத்தி பண மோசடி செய்து வந்துள்ளார் மோகன்ராஜ். பிறரது கிரெடிட் கார்ட் எண்களைப் பயன்படுத்தி பல லட்சங்களைசுருட்டியுள்ளார்.

ஒரு நிறுவனத்திடம் ஆன் லைனில் ரூ. 1 லட்சத்துக்கு செல்போன்களை வாங்கினார்மோகன் ராஜ். அப்போது அவர் பல கிரெடிட் கார்டுகளின் எண்களைப்பயன்படுத்தவே சந்தேகமடைந்த நிறுவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்விசாரணை நடத்தி வந்தனர்.

உதவி கமிஷனர் பாலு தலைமையிலான போலீசார் திருப்பூர் சென்று மோகன்ராஜைகைது செய்தனர். அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X