For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்குமார் உடல் அடக்கம்- ரஜினி அஞ்சலிபயங்கர வன்முறை- போலீஸ் சுட்டு 5 பேர் பலிதமிழ் சேனல்கள் கட்- தமிழக பஸ்கள் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் உடல் இன்று மாலை கண்டீரவா ஸ்டுடியோவில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது உடல் கண்டீரவா மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான மக்களும் அவரது ரசிகர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த்ராஜ்குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியுடன் நடிகர் பிரபுவும் உடன் வந்தார்.

ராஜ்குமார் மறைவைத் தொடர்ந்து நேற்று முதல் பெங்களூரில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. போலீஸ் ஜீப்புகள், வேன்கள், கார்கள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று 5வாகனங்களும் இன்று 3 பஸ்கள் உள்ளிட்ட 20 வாகனங்களும் தீக்கிரையாயின.

மேலும் நூற்றுக்கணக்கான பஸ்கள், கார்கள், வேன்கள், லாரிகள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதில் இரு தமிழகபஸ்களும் அடக்கம்.

பல்வேறு நிறுவனங்கள் மீது கல்வீச்சு நடந்தது. பெரும்பாலான கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. இன்றுஅரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. பஸ்கள் மிகக் குறைவானஎண்ணிக்கையிலேயே இயங்குகின்றன.

தமிழக பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒசூருடன் நிறுத்தப்பட்டுவிட்டன. அதே போல வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகளும் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் ஒசூர் முழுவதும் பெரும்போக்குவரத்து நெரிசலும் ஜன நடமாட்டமுமாக உள்ளது.

அதே போல மேட்டூர் பகுதியில் இருந்து மைசூர் செல்லும் பஸ்கள் மாதேஸ்வரன் மலையோடுநிறுத்தப்பட்டுவிட்டன.

பெங்களூரில் இன்று திறந்திருந்த ஒரு சில கடைகளையும் மூடச் சொல்லியும், கார்மெண்ட் நிறுவனங்களை மூடச்சொல்லியும் ஆங்காங்கே வேன்களிலும் பைக்குகளிலும் வந்து மிரட்டல் விடுத்தனர். கல்வீச்சிலும் இறங்கினர்.

பாதுகாப்பு காரணங்களால் இன்றும் பெங்களூரில் பெரும்பாலான மக்கள் வெளியில் வரவில்லை. இதனால் ஊரேவெறிச்சோடிக் காணப்படுகிறது.

தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பும் பல பகுதிகளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பல பகுதிகளில் கேபிள்டிவிக்காரர்கள் தமிழ் சேனல்கள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டனர்.

ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்டீரவா ஸ்டேடியத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான ராஜ்குமார் ரசிகர்கள்கூடினர். ஸ்டேடியத்தின் வெளியே அவர்கள் வன்முறையில் இறங்கினர். சில வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.ஸ்டேடியத்தின் சில பகுதிகளுக்கும் ராஜ்குமார் ரசிகர்கள் தீ வைத்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக்கலைத்தனர்.

பிற்பகலில் கண்டீரவா ஸ்டேடியத்தில் இருந்து ராஜ்குமாரின் உடல் ஊர்வலமாகநந்தினி லே-அவுட்டில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ராஜ்குமாரின் உடலைத் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் வழியெங்கும்பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

மூடப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகள் மீது கல்வீச்சில் இறங்கினர். வழியில் பலவாகனங்களுக்கு தீ வைத்தனர். ஒரு பெட்ரோல் பங்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

விதான செளதா அருகே பசவேஸ்வரா சர்க்கிள் அருகே சென்றபோது ராஜ்குமார்ரசிகர்கள் பயங்கர வன்முறையில் இறங்கவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதில் இருவர் பலியாயினர்.

அதே போல யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தை ஊர்வலம் கடந்தபோது போலீசாரின்வாகனங்களுக்கு ரசிகர்கள் தீ வைத்தனர். காவல் நிலையத்தையும் தாக்க முயன்றனர்.இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 2 பேர் பலியாயினர்.

இன்னொரு இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இன்னொருவர் இறந்தார். ரசிகர்கள்நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் பல போலீசாரும் காயமடைந்தனர்.

ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்ட கண்டீரவா ஸ்டேடியத்தில் போலீசாரால்கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து பயங்கரகலாட்டாவில் இறங்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடித்தினர்.

எஸ்வந்த்புரா சர்க்கிள் அருகே பல கார்களையும் ரசிகர்கள் உடைத்து தீ வைத்தனர்.போலீஸ் வாகனங்களும் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

ராஜ்குமாரின் உடல் கண்டீரவா ஸ்டுடியோவில் மாலை அடக்கம் செய்யப்பட்டது.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான நடிகர் அர்ஜூனும், ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் செல்லத் திட்டமிட்டவர்கள் பஸ்கள் இல்லாமல் பெரும்சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஒசூரை அடைந்துவிட்டால் ஊருக்குச் சென்றுவிடலாம் என்ற திட்டத்துடன்பெங்களூர்-ஒசூர் சாலையில் ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுள்ளனர்.

ஆனால், மிகக் குறைவான பஸ்களே ஒசூர் எல்லை வரை இயக்கப்படுவதால் அந்த பஸ்களில் பெரும் கூட்டம்காணப்பட்டது.

ரயில்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மைசூர்-சென்னை சதாப்தி ரயில் மீது பெங்களூர்அருகே சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் பல பெட்டிகளின்கண்ணாடிகள் உடைந்தன. சில பயணிகள் காயமடைந்தனர்.

தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன.

தமிழ் சினிமா சூட்டிங்குகள் ரத்து:

கன்னட நடிகர் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழ்திரைப்பட படப்பிடிப்புகள் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராஜ்குமார் மறைவுச் செய்தி அறிந்ததும், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்டபல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கூடி ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல்தெரிவித்தனர்.

பின்னர் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு ராஜ்குமாருக்கு துக்கம்அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது.

இதேபோல நடிகர் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார்ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ்குமார் மறைவு கன்னடத்திரையுலகுக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகுக்கே மிகப் பெரியஇழப்பாகும்.

ரசிகர்களை தனது குடுபத்தினராக நினைத்த ராஜ்குமாரின் மறைவுக்கு தென்னிந்தியதிரைப்பட நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக்கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X