சினிமாவாகும் கருணாநிதி வாழ்க்கை
பல் துறை நிபுணராக விளங்கும் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை முழு நீளதிரைப்படமாகிறது. கருணாநிதி வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகரைத் தேடும்படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அரசியல் தவிர எழுத்து, பேச்சு, சினிமா, கலை என பன்முகத் தன்மை கொண்டகருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளார் இயக்குனர்ஜி.சக்தி. கலைஞர் என்று இப்படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் பொன்மேகலை என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த சக்தி. இதில்அபினய், நித்யா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசைவண்ணத்தில் உருவான படம் பொன்மேகலை.
கருணாநிதி குறித்த படத்துக்கும் இளையராஜவே இசையமைக்கவுள்ளார்.
கருணாநிதி வேடத்தில் நடிப்பதற்கு ஏற்ற நடிகரைத் தேடி வருகிறார் சக்தி. நடிகர்தேர்வு முடிந்ததும் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார். இப்படம் தொடர்பாககருணாநிதியையும் சந்தித்துப் பேசியுள்ளார் சக்தி.
விரைவில் திருக்குவளை கிராமத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்சக்தி. பொங்கலுக்கு இப்படத்தை திரைக்குக் கொண்டு வரவும் தீர்மானித்துள்ளார்.இப்பட உருவாக்கத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கை கொடுக்கஉள்ளதாக கூறப்படுகிறது.
டிவி நடிகைகள் சந்திப்பு:
இந் நிலையில் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் முதல்வர் கருணாநிதியை நேரில்சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வராகப் பதவியேற்றுள்ள கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்குடிவி நடிகர், நடிகையர் சந்தித்தனர்.
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் விடுதலை தலைமையில் சென்ற இக்குழுவில்நடிகைகள் கே.ஆர்.வத்சலா, டாக்டர் ஷர்மிளா, நடிகர்கள் வசந்த், திருச்செல்வன்,ராஜசேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
முதல்வரிடம் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.முதல்வர் பதவியேற்றதற்காகமரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் என்று பின்னர் நடிகர், நடிகையர்செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இருப்பினும் சின்னத் திரையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்கள்கருணாநிதியிடம் வாய் மொழியாக கோரிக்கைகள் சிலவற்றை வைத்ததாககூறப்படுகிறது.