For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட ஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்- பிரதமருக்கு கருணாநிதி யோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உயர் கல்விப் படிப்புகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வசதியாகஅவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்விநிறுவனங்களில் பயில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தேவைஎன்பது தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

இந்த கனவு தற்போது ஐக்கியற்போக்குக் கூட்டணி அரசால் நனவாகும் நிலைஉருவாகியுள்ளது. ஆனால் அதற்கு சில குறிப்பிட்ட பிரிவினர் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் சமுதாயத்தில் அடித்தளங்களில்உள்ளவர்களின் எதிர்காலம் மத்திய அரசின் சாதகமான நடவடிக்கையில்தான் உள்ளது.

மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தீவிரமாக இருப்பதால் மக்களின்எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. 27 சதவீத இட ஒதுக்கீட்டைஅமல்படுத்துவதில் மாற்றமோ, தாமதவோ இருக்கக் கூடாது.

இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வசதியாக, உடனடியாக மத்திய அரசு அவசரச்சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கருணாநிதி யோசனைதெரிவித்துள்ளார்.

குட்டிகளுக்கு பரிசு தந்த தாத்தா:

இந் நிலையில் போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்வதற்காக தனது வீட்டுக்குவந்த குட்டிக் குழந்தைகளுக்கு பொம்மைகளை பரிசாக கொடுத்துஅசத்தினார்கருணாநிதி.

நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகொடுக்கும் முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்துகொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னையில் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சொட்டு மருந்துகொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.முதல்வர் கருணாநிதி பல குழந்தைகளுக்கு தனது கையால் சொட்டு மருந்தைக்கொடுத்தார்.

போலியோ சொட்டு மருந்து பெறுவதற்காக குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்குகருணாநிதி வீட்டில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சொட்டு மருந்து கொடுத்த கையோடு, குழந்தைகளிடம் ஒரு பையையும் கருணாநிதிகொடுத்தார். அந்த பையில் பொம்மைகள் இருந்தன.

சொட்டு மருந்து கொடுத்தால் பிஸ்கட்தான் வழக்கமாக கொடுப்பார்கள். ஆனால்கருணாநிதி தாத்தா பொம்மைகளும் கொடுத்தார்.

இலங்கை எம்பி தந்தை மறைவுக்கு இரங்கல்:

இதற்கிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பியுமானஆறுமுக தொண்டைமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல்தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுக தொண்டைமான்.முன்னாள் அமைச்சரான தொண்டைமான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகஉள்ளார். இவரது தந்தை செளமி மூர்த்தி குமாரவேல் ராமநாதன்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமநாதன் சென்னையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்இறந்தார். இதையடுத்து தொண்டைமானுக்கு இரங்கல் தெரிவித்து கருணாநிதி கடிதம்அனுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X