• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த நாள்-கருணாநிதிக்கு பர்னாலா நேரில்வாழ்த்து-துரோகம் கூடாது

By Staff
|

சென்னை:

முதல்வர் கருணாநிதியின் 83வது பிறந்தநாளையொட்டி ஆளுனர் பர்னாலா இன்றுநேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கருணாநிதி இன்று தனது 83வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டிகோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதலே தொண்டர்கள்,தலைவர்கள குவிந்தனர்.

முதல் பிரமுகராக ஆளுநர் பர்னாலா இன்று கருணாநிதியின் வீட்டுக்கு வந்தார்.மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல திமுக முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள், எம.எல்.ஏக்கள்,பல்துறைப் பிரமுகர்களும் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பெரியார் நினைவிடத்தில்..

முன்னதாக கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் படத்திற்கு மாலைஅணிவித்து வணங்கினார். அதன் பின்னர் பெரியார், அண்ணா நினைவிடங்களுக்குச்சென்று அஞ்சலி செலுத்தினார்.

துரோக எண்ணம் கூடாது: கருணாநிதி

கருணாநிதி எழுதிய காலப்பேழையும், கவிதைச் சாவியும் மற்றும் சிந்தனையும்,செயலும் என்ற இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நேற்று இரவு நடந்தது.

காலப்பேழையும், கவிதைச் சாவியும் நூலை இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்தா.பாண்டியன் வெளியிட பேராசிரியர் அவ்வை நடராஜன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சிந்தனையும் செயலும் நூலை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணிவெளியிட கவிஞர் வாலி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், வழக்கமாக எனது பிறந்த நாளுக்கு முன்பாகஇலக்கிய அணி, மகளிர் அணி, இளைஞர் அணி சார்பில் இதுபோன்ற விழாக்களுக்குஏற்பாடு செய்யப்படும். விழா முடிந்ததும் நான் பிறந்து விடுவேன், 3ம் தேதி வந்துவிடும்.

நல்ல வேளையாக இன்று 10 மணிக்குள் தேர்தல் கால கூட்டத்தைப் போல இந்த விழாநிறைவுற இருக்கிறது.

வாட்டம்.. கலக்கம்:

நூல்களை உரிய தொகை கொடுத்து வாங்க இங்கே நீண்ட வரிசையில் நின்றார்கள்.அதில் பலரும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அதில் ஒருவர் முகம் மட்டும்வாட்டத்துடன் இருந்ததைப் பார்த்தேன். அவரும் கலக்கத்துடன் பார்த்தார்.

அவர் வெற்றி வாய்ப்பை இழந்த ஒரு உடன் பிறப்பு. என்ன இப்படி ஆகி விட்டதேஎன்றேன். நம்மவர்களே துரோகம் செய்து விட்டார்கள் என்றார்.

துரோகம் நம்மவர்கள்தான் செய்வார்கள். மற்றவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள்.துரோகம் எதிரியால் விளைவிக்கப்படுவதல்ல, எதிரி செய்தால் அது போர், தாக்குதல்என்பதைத்தான் அந்தத் தம்பிக்கு உணர்த்தினேன். எல்லோரும் இதை உணரத்தான்கூறினேன்.

இந்த இனம் முன்னேற வேண்டும், இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்என்று எல்லோரும் இங்கு பேசினார்கள், நானும் அதைத்தான் விரும்புகிறேன். நாம்பலவீனமானவர்களாகக் கூட இருக்கலாம், வலுவற்றவர்களாக இருக்கலாம், எதிர்த்துப்போரிட முடியாதவர்களாக, எதிரிகளை சமாளிக்க முடியாதவர்களாகக் கூட ஆகலாம்.

சமுதாயம் வெல்ல..:

நாம் நமக்குள் துரோகிகளாக மட்டும் ஆகி விடக் கூடாது.

காவியங்கள், காப்பியங்களிலும் துரோகம் விட்டபாடில்லை. இந் நாளும் துரோகம்வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தன்மையைஎதிர்க்க, வீழ்த்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் நம் சமுதாயம் நீடித்து, நிலையாக வாழ தகுதியற்றதாகி விடும்.துரோகம் செய்யாமல் வாழ்வேன், அப்படி என்றால்தான் நமக்கு யாரும் துரோகம்செய்ய மாட்டார்கள் என்பதை பிறந்த நாள் செய்தியாக கூறுகிறேன் என்றார்கருணாநிதி.

ப.சி மீது தா.பா தாக்கு:

தா.பாண்டியன் பேசுகையில், 2 ரூபாய்க்கு இங்கே அரிசி தரப் போகிறார்கள். ஆனால்அரிசி மானியத்தையும், அளவையும் குறைக்கப் போகிறது மத்திய அரசு என தகவல்வருகிறது. நிதி அமைச்சர் சிதம்பரம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவோம்என்கிறார்.

அதேசமயம் கோதுமை இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு கூறுகிறது. 2ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்திற்கு ஆதரவு தருவோம் என்று கூறி விட்டுஇப்போது மானியத்தைக் குறைக்கலாமா என்று மத்திய அரசைக் கண்டித்து கருணாநிதிஅறிக்கை விட்டிருக்கலாம்.

என்ன செய்வது, அவர்களையும் நாம்தான் தாங்க வேண்டியிருக்கிறது என்றார்பாண்டியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X