For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட கருணாநிதி முயற்சி: ஜெ புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட திமுக அரசு முயற்சி செய்வதாக அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக மைனாரிட்டி அரசு என்றைக்கு பதவி ஏற்றதோ அன்றைய நாளிலிருந்தே தமிழ்நாட்டு மக்களுக்கு இருந்தநல்லவைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டும், சீரழிவுகள் தொடங்கிவிட்டன.

அதனுடைய தொடர்ச்சிதான் சில நாட்களுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி அவசரச் சட்டம் ஆகும்.இதுவரை நடைமுறையில் இருந்த வந்த விதிமுறைபடி நகராட்சித் தலைவர், மாநகராட்சியின் மேயர் ஆகியோரைவாக்காளர்களே தங்களது வாக்குப் சீட்டுகளின் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

சென்னை நகரைப் பொறுத்த வரையில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளநிலையில், சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ள இந்த நேரத்தில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடிஎதையும் செய்ய இயலாமல் குழம்பிப் போய் நிற்கிறது.

அதனால் மக்களின் வெறுப்பு திமுக மைனாரிட்டி அரசின் மீது நாளுக்கு நாள் பொருகி கொண்டு வரும் இந்தநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் அதன் மானம் காற்றில் பறக்கும் என கருணாநிதி கருதுவாதால்மேற்படி அவசர சட்டம் மிகவும் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டமன்ற பேரவை வருகிற 22ம் தேதி கூட இருக்கின்ற சூழ்நிலையில் அதற்காக கூட காத்திருக்க முடியாமல்மேற்படி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் சட்டமன்றம் கூடவுள்ளசூழ்நிலையில் இந்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும், இதற்கான உள்நோக்கம் என்ன என்று மற்றொரு கேள்வியும் எல்லோர் மனதிலும் எழக்கூடும்.

கருணாநிதியை புரிந்து கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியத்தை அளிக்காது. தன் குடும்பம்மட்டும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஏறக்குறையகோடிக்கணக்கான குடும்பங்களுக்கு எந்த பாதகம் ஏற்பட்டாலும் அதை பற்றி கவலைப்படாதவர் தான் அவர்.

கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தம், அவைகளின் வெறுப்பு, ஒத்துழையாமை ஆகியவை மிகத் தெளிவாகவெளிப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவை கருணாநிதி எடுத்து இருப்பது எந்தவிதத்திலும்எதிர்ப்பார்க்காத ஒன்று அல்ல.

இந்தச் சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக தேல்வி அடைந்தால் திமுக ஆட்சியினுடைய மேலாண்மை,நம்பகத்தன்மை ஆகியவற்றை அடியோடு இழந்து, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், அரசுஊழியர்கள் ஆகியோர் மேற்படி திமுக மைனாரிட்டி அரசுக்கு எந்த விதத்திலும் செவி சாய்க்க மாட்டார்கள்.

இந்த காரணத்தினால் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் விதிமுறைகளில் குழப்பம் செய்து அதன் மூலம்யாரையாவது தூண்டிவிட்டு அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் அதைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலைநடைபெறவிடாமல் தடுத்து விடலாம் என்பது கருணாநிதியின் எண்ணம்.

எந்த ஒரு நல்ல அமைப்பையும் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால், அதனை கெடுத்து குட்டிச்சுவராக்குவதுதான் கருணாநிதிக்கு கை வந்த கலை. அதனுடைய பிரிதிபலிப்பு தான் கடந்த 14ம் தேதி பிறப்பிக்கப்பட்டஉள்ளாட்சிகள் சம்பந்தப்பட்ட அவசரச் சட்டமாகும்.

இந்திய மக்கள் தன்னாட்சி உரிமை பெறும் போது அவர்கள் நிர்வாகத்திற்கு தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடனும், பொது மக்கள் தங்களைத் தானே ஆளுவதற்கு வழி செய்யும் முகமாகவும்,நிர்வாகத்தில் அவர்களுக்கு பயிற்சி தரவும், இந்திய மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் போராடியதன்விளைவாக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டு, 1919ம் ஆண்டு சென்னைமாநகராட்சி சட்டமும், 1920ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டமும் உருவாக்கப்பட்டன.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரிட்டிஷ் அரசாங்கம் எவ்வளவு தூரத்திற்கு சுதந்திரத்தை தள்ளி வைக்கவேண்டும் என்று நினைத்ததோ, அவ்வளவு தூரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நேரடித்தேர்தலை தவிர்த்து வார்டு உறுப்பினர்கள் மூலம் நகராட்சித் தலைவர் மற்றும் மேயர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று ஒரு வழிமுறையை கொண்டு வந்தது.

மக்களின் எழுச்சி, உணர்வுகள், ஆளுகைத் தன்மை எல்லா விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்றநோக்கத்துடன் தான் 1992ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இது குறித்து பல புதிய பிரிவுகள்சேர்க்கப்பட்டன.

இதன் மூலம் கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகள் எவ்வாறு இயங்க வேண்டும்,அதன் தன்னாட்சி உரிமைகள் என்ன, பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு ஒதுக்கக்கூடியஇடங்கள் எவ்வளவு என வரையறை செய்து பல வகையிலும் மேம்பட்ட முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குமுக்கியதுவம் தரப்பட்டது.

என் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டு, அதன் மூலம் மக்கள்நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டஉள்ளாட்சியின் தன்னாட்சி முறையை சீர்குலைக்கும் விதத்தில் மேற்படி அவசரச் சட்டத்தினை கருணாநிதி அவசரஅவசரமாக பிறப்பித்திருக்கிறார்.

இதன் மூலம் சுதந்திர வேட்கையையும், ஜனநாயக உரிமையையும் ஏற்றுக் கொள்ளாத பிரிட்டிஷ் அரசாங்கத்தின்பழமை முறைக்கு, அதாவது சுதந்திர வேட்கையினை கிள்ளி எரியும் விதத்தில் செயல்பட்ட பிரிட்டிஷாரின்காலத்திற்கு கருணாநிதி தமிழகத்தை கொண்டு செல்ல விருப்புகிறார்.

இதற்கு காரணம் அவருடைய சுயநலம் தானே தவிர பொது நோக்கம் ஏதும் இல்லை. வார்டு உறுப்பினர்கள்மூலம் நகராட்சி தலைவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை தமிழகம் ஏற்கனவே கண்கூடாகப்பார்த்துள்ளது.

ஆள் தூக்கும் அவலங்கள், வார்டு உறுப்பினர்களை கடத்தும் வைபவங்கள், குதிரை பேரங்கள், அடிதடிகள்,வெட்டு குத்துக்கள், துரோகக் செயல்கள் ஆகியவை ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு நடைபெறும் காட்சிகளைமக்கள் பார்த்தார்கள். இதைத்தான் கருணாநித மிகவும் விரும்புகிறார்.

மேற்பேடி செயல்கள் நடந்த காரணத்தினாலும், இந்திய விடுதலையின் உண்மையான நோக்கம்,மக்களாட்சியினுடைய தன்மை ஒவ்வொரு அங்கத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தான்உள்ளாட்சித் தேர்தல் முறையில் மக்களே நேரடியாக பங்கேற்று அந்தந்த அமைப்புகளின் தலைவர்களை மக்களேநேரிடியாக தேரந்தெடுக்கும் வாய்ப்பினை எனது அரசு மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டது.

கருணாநிதி கொண்டு வந்திருக்கின்ற புதிய அவசர சட்டத்தின் மூலம் மக்களுக்கும், மேற்படி நகராட்சிஅமைப்புகளுக்கும் இடையில் ஒரு இருப்பு திரை விழுந்துள்ளது. அவர்களை ஆட்டிப் படைக்கும் சர்வ அதிகாரம்உள்ளவர்களாக நகராட்சி மற்றும் மாநகராட்சி மேயரும் இருப்பார்கள்.

மக்கள் தொடர்பே இல்லாத ஒரு நிர்வாகம் நடப்பதற்கும் இது வழிவகை செய்யும். கருணாநிதி ஆட்சிக் காலத்தில்சென்னை மாநகாரட்சி என்ன பாடுபட்டது என்பதை நாடறியும்.

மாநகராட்சியின் மின்சாரத் துறை என்கின்ற ஒரே ஒரு துறையில் மட்டிலுமே மாபெரும் ஊழல் நடந்தையும், அதுசமபந்தமாக மாநகராட்சிக்கு ஏறக்குறை 20 ஆண்டுளுக்கும் மேலாக தேர்தல் நடைபெறவில்லை என்பதையும்இதற்குள் சென்னை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மின்சாரத் துறையில் பணியாற்றிய சாதாரண ஊழியர்கள் கூட பட அதிபர்களாக மாறியதையும், அந்தக் காலத்தில்வார்டு உறுப்பினர்கள் சிற்றரசர்களாக வலம் வந்ததையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

நாடு அத்தகைய காட்சிகளை திரும்பவும் காண வேண்டும் என்பதற்காக இந்த அவலமுறையை அவர் கொண்டுவந்திருக்கிறார். கடந்த சில காலமாகவே எனக்குள் ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.

அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் மேற்படி அவசரச் சட்டம் வந்துள்ளது. எதையாவதுகாரணம் காட்டி குறிப்பாக மேற்படி அவசரச் சட்டம் குறித்து நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கினை தானேதூண்டிவிட்டு தாக்கல் செய்ய வைத்து அதன் மூலம் தேர்தலை தள்ளிப் போகச் செய்யலாம் என்பதும்கருணாநிதியின் நோக்கமாக இருக்கக்கூடும்.

எது எப்படியாகினும் மேற்படி அவசர சட்டம் நல்லதற்கு கொண்டு வரப்படவில்லை. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு இது கொண்டு வரப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் இந்த அவசரச்சட்டம் உருவாக்கப்படவில்லை. இச்சட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு தனது நீண்ட அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X