For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாதுஎன்பதற்கு உதாரணம் காளிமுத்து: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால்,அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பாகவே அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

இதையடுத்து அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதா, முதல்வர் மீது கொண்டு வருவதா என்றெல்லாம்சிந்தித்துப் பார்த்து, எதற்கு வம்பு, தாற்காலிகமாக சபாநாயகர் மீதே கொண்டு வந்துவிடலாம் என்று இன்று இந்ததீர்மானத்தை கொண்டு வந்து சோதித்துப் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

இதுவரையிலேயே அவர்கள் மைனாரிட்டி அரசு என்று சொன்ழது நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கவும் முடியாதுஎன்ற காரணத்தால் அவர்களாகவே இன்றைக்கு வெளியேறி தங்களுடைய தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இந்த ஐந்தாண்டு காலத்துக்கும் எங்களுக்குப் பேரவைத் தலைவர் தான். ஆனால், பேரவைத் தலைவர்கள்எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்லலாம்.

ஏறத்தாழ 57ம் ஆண்டிலிருந்து நான் இந்த அவையிலேயே இருந்தவன் என்ற காரணத்தால் எங்களைக் கூடகடிந்து கொண்ட பேரவைத் தலைவர்கள் உண்டு. நாங்கள் அவர்களை திருப்பி கடிந்ததில்லை.

எப்படி ஒரு சபாநாயகர் இருக்கக் கூடாது என்பதற்கு ஒன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

இந்த அவைக்கு, இந்த அவையை நடத்துகிற செயலகத்துக்கு உட்பட்ட சில பகுதிகள் கோட்டையைச் சுற்றியும்,எம்எல்ஏக்கள் தங்கியிருக்கின்ற விடுதிகளைச் சுற்றியும் இருக்கின்றன.

அவைகளில் உணவு விடுதிகளும் உண்டு. அந்த உணவு விடுதிகள் காலம் காலமாக பலராலும் ஏலம்எடுக்கப்பட்டோ, அல்லது ஒப்பந்தம் போடப்பட்டோ தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் அண்ணா பெயரால்அமைந்த அசைவ உணவு விடுதி ஒன்றும் இருந்தது.

அந்த அண்ணா உணவகத்தை நடத்தி வரும் கே.வி.ஆர். மணி என்பவர் அந்த உணவகம் நடத்த வழங்கப்பட்டகாலம் 03.02.2002 உடன் முடிவுற்றதால், அந்த உணவகத்தை உடனடியாகக் காலி செய்து ஒப்படைக்கும்படிகேட்டுக் கொள்ளப்பட்டது.

அதற்கு அந்த கே.வி.ஆர்.மணி என்ற உணவக உரிமையாளர், அந்த உணவகத்தை ஒப்பந்த அடிப்படையில்வருடத்துக்கு ரூ. 2.6 லட்சம் வாடகைக்கு தொடர்ந்து நடத்த அனுமதி தருமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார்.வருடத்துக்கு ரூ.2.6 லட்சம் வாடகை தந்துவிடுவதாகக் கூறுகிறார்.

இதற்கான கோப்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 16.02.02 அன்று தனது கைப்பட பிறப்பித்த ஆணையில்,கே.வி.ஆர். மணிக்கே ஓராண்டு காலத்துக்கு அந்த உணவகத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றும், அதற்கு மாதவாடகையாக ரூ. 2,750யை நிர்ணயிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

மணி தர முன் வந்த தொகை வருடத்துக்கு ரூ.2.6 லட்சம். ஆனால், காளிமுத்து (12 மாதத்துக்கு ரூ. 2,750 என்றவகையில்) ரூ. 33,000 மட்டும் போதும் என்று ஆணை பிறப்பித்தார். மீதி பணம் எங்கே போனது?.

இப்படி ஏராளம் இருக்கிறது. நிறைய இருக்கிறது. உதாரணத்துக்கு தான் ஒன்றைச் சொன்னேன்.

எங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக, என்னுடைய நம்பிக்கைக்கு உரியவராக, கடந்த காலத்தில் பேரறிஞர்அண்ணாவின நம்பிகைக்கு உரியவராக விளங்கி இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கின்ற, தங்கள் மீதுநம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அவர்கள் தங்களைத் தாங்களே நம்பாமல் கொடுத்தது என்பதைத் தவிரவேறல்ல.

எங்களுக்கு உங்கள் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் இந்த அவையில் உங்கள் இருக்கையில் வந்துஅமருங்கள். எங்களை வழி நடத்துங்கள் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X