For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலையா?-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக ஆட்சியின் போது விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்றுமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக ஆட்சிக் காலத்தில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட 22விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 50,000 நிதிவுதவி வழங்கப்படும் என்றுசட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நாங்கள் தடுக்கவில்லை, ஆட்சேபிக்கவும்இல்லை. உதவிகள் விவசாயிகளுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதில் எங்களுக்குஒரு உறுதியான கருத்து உண்டு. ஆனால் எனது ஆட்சிகாலத்தில் வறட்சியால்விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சொல்வது உண்மைக்குபுறம்பானது.

இந்தியா முழுவதும் வறட்சி ஏற்பட்ட போது பிற மாநிலங்களில் விவசாயிகள் பலர்தற்கொலை செய்து கொண்டனர். அப்படிப்பட்ட நிலை தமிழக விவசாயிகளுக்குவந்து விடக்கூடாது என்பதற்காகவே மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு 30 கிலோஅரிசியை வறட்சிக் காலத்தில் நான் வழங்கினேன்.

அது மட்டுமல்லாமல், நாடெங்கும் தீபாவளி திருநாளைக் கொண்டாடும் வேளையில்,குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் வேலை இன்றி வாடிய காவிரிப் பாசனவிவசாயத் தொழிலாளர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றநல்லெண்ணத்தின் அடிப்படையில் தீபாவளி பரிசு ஒன்றினையும் எனது அரசுவழங்கியது.

அதிமுக ஆட்சியின் போது விசாயிகள் பட்டினியால் சாவதாக சட்டமன்றத்தில் இந்தியகம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிவபுண்ணியம் பலமுறை கூறினார். நான் அதற்குஉடனடியாக மறுப்பு தெரிவித்து திரும்பத் திரும்ப விளக்கம் அளித்திருக்கிறேன்.

இயற்கை மரணங்களையும், பல்வேறு குடும்ப பிரச்சனைகளின் காரணமாகநடைபெற்ற தற்கொலைகளையும் தீராத பட்டினியால் ஏற்பட்ட சாவு என்றும், காய்ந்தபயிரினைக் கண்டு மனம் வெதும்பி அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம் என்றும் கூறிதங்களது செய்தி தொடர்பு சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்தி விஷமத்தனமானபிரச்சாரங்களில் திமுகவினரும் ஈடுபட்டு வந்தார்கள்.

பயிர் கருகியதாலும் பட்டினியாலும் சிலர் இறந்து விட்டார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் தவறான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து நான் சட்டசபையில் அப்போதே பேசி இருக்கிறேன்.

ஆனாலும் தற்போது சிவபுண்ணியத்தை ஏவி விட்டு பேசச் செய்து எனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், அதற்கு இப்போதுஉதவித் தாாெகை வழங்கப்படுகிறது என்றும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருகிறார் கருணாநிதி.

சட்டசபையின் பாதுகாப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி எங்கள் மீது இம்மாதிரியான வீண் பழி சுமத்துவது கீழ்த்தரான செயலாகும். 1972ல் திமுக ஆட்சிகாலத்தில் விவசாயத்திற்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதை ஒருபைசா அளவிற்கு குறைக்கச் சொல்லி விவசாயிகள் தமிழகம் எங்கும் போராட்டம்நடத்தினார்கள்.

அதைத் தாங்கிக் கொள்ள இயலாத அப்போதயை கருணாநிதி தலைமையிலான திமுகஅரசு விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. அதனால் பல விவசாயிகள் மரணம்அடைந்தனர்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X