• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தந்திரி-ஷோபா விவகாரம்: சிக்கினார் நடிகர் பெச்சு ரஹ்மான்

By Staff
|

கொச்சி:

தந்திரி கண்டரரு மோகனருவை ஆபாச கோலத்தில் புகைப்படம் எடுக்க விபச்சாரப்பெண் ஷோபா மூலம் கூலிப் படையை ஏவிய டிவி மற்றும் சினிமா பிரமுகர் யார்என்பது தெரிய வந்துள்ளது. பெச்சு ரஹ்மான் என்ற அந்த நபரை கைது செய்யபோலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Pechu Rahman

எர்ணாகுளத்தைச் சேர்ந்த சாந்தா-ஷோபா ஆகிய விபச்சாரப் பெண்களின் வீட்டுக்குதந்திரி போனபோது அவரை ஆபாசமான கோலத்தில் படம் பிடித்தது ஒரு கும்பல்.

இந்தக் கும்பலின் தலைவியாக செயல்பட்டு, திட்டம் தீட்டிக் கொடுத்தவரான ஷோபாமற்றும் அவரது கூட்டாளிகள் விஜில், அனில்குமார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துளளனர்.

தந்திரியிடம் பணம் பறிக்க ஷோபாவிடம் இத் திட்டத்தைக் கூறி அதற்கு உதவிசெய்தவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு டிவி மற்றும் திரைப்படத்தயாரிப்பாளர்-நடிகர் தான் என விசாரணையில் தெரிய வந்தது.

அந்த நபர் யார் என்பது இதுவரை வெளியில் சொல்லப்படாமல் இருந்தது. தற்போதுஅவர் யார் என்பது வெளியில் கசிந்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த சினிமா பிரமுகரின் பெயர் பெச்சு ரஹ்மான்.ஷோபாவுக்கு மிகவும் நெருக்கமான இந்த பெச்சு ரஹ்மான். தற்போது தலைமறைவாகிவிட்டார்.

அவரைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர். மேலும் கூலிப்படையைச் சேர்ந்தமற்ற 5 பேரையும் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.

பைஜூ ரஹ்ான், அப்துல் ரஹ்மான் என்றும் அழைக்கப்படும் பெச்சு ரஹ்மான்மலையாளத்தில் அபரிஜிதன், ராபிட் ஆக்ஷன் போர்ஸ், அரிகரன்பிள்ளை ஆகியபடங்களில் மம்மூட்டி, மோகன்லாலுடன் நடித்தவர்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் மாயா உள்ளிட்ட பல மலையாள சீரியல்களில் நடித்துவருகிறார். வெள்ளிமணி சாலம் என்ற படத்தை தானே தயாரித்து ஹீரோவாகவும்நடித்தார். அந்தப் படம் பெட்டியில் தூங்குகிறது.

மஸ்கட்டில் சில காலம் பணியாற்றிய இவர் அங்கு நடிகை, நடிகர்களை வைத்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளார். அப்போது அவருக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்படவேஅவர்களில் சிலரை வளைகுடாவில் பல விஐபிக்களுக்கு சப்ளை செய்து பணம்சம்பாதித்துள்ளார்.

பின்னர் கொச்சிக்குத் திரும்பிய பைசூ ஒரு நடிகையுடனும் சில காலம் குடும்பம்நடத்தினார்.

விபச்சாரத் தொழில் நடத்தி வந்த ஷோபாவோடு பைஜூவுக்கு 3 வருட பழக்கமாம்.கொச்சியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து பே-இன்-கெஸ்ட் என் லாட்ஜ்நடத்திய பைஜூ அங்கு விபச்சாரிகளை கஸ்டமர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

இந்த பெண் சப்ளைக்கு ஷோபா தான் உதவியாக இருந்துள்ளார். மேலும் இந்தவிடுதியில் வைத்து புளூ பிலிம்களும் எடுக்கப்பட்டுள்ளன. சினிமா ஆசையில் வரும்பெண்களை தயாரிப்பாளர்-நடிகர் என்ற வகையில் மடக்கிப் போட்ட பைஜூ அதில்பலரையும் விபச்சாரத்தில் தள்ளியதோடு சிலரை புளூ பிலிம் நடிகைகள்ஆக்கியுள்ளார்.

தலைமறைவாகிவிட்ட பைஜூவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் இவர்எடுத்த பட புளூ பிலிம்கள் சிக்கின

பைஜூ மீது தமிழத்திலும் வழக்கு உள்ளதாம். சுப்ரீம் மில்க் என்ற பால் வினியோகநிறுவனத்தை நடத்திய பைஜூ மீது தமிழக போலீசில் செக் மோசடி வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தந்திரியை படம் பிடிக்க ஷோபாவுக்கு உதவி செய்தது பைஜூவுக்கு நெருக்கமானசினிமா ஸ்டண்ட் நடிகர்கள் தான் என்கிறார்கள்.

தந்திரி விவகாரத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சினிமா பிரமுகர் மாட்டிவிட்டார்.ஷோபாவிடம் ஏமாந்த தமிழக கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் குறித்த விவரம் தான்இன்னும் வெளியில் வரவில்லை.

இதற்கிடையே பைஜு தற்போது போலீஸ் பிடியில் சிக்கி விட்டதாகவும் தகவல் வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X