• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஷப்பிடம் சிக்கிய ஆசிரியை தீபா எங்கே?

By Staff
|

காஞ்சிபுரம்:

மோசடி பிஷப் ஆனந்த ராஜுக்கு நெருக்கமாக இருந்த தீபா என்ற பெண்மாயமாகிவிட்டதால் அவரது பெற்றோர் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Deepa with Bishop

ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானகாண்டிராக்டர்களை ஏமாற்றி ரூ. 100 கோடிக்கும் மேல் மோசடி செய்து கைதாகியுள்ளபிஷப் ஆனந்தராஜ் குறித்த பல தகவல்கள் வெளியாகி தொடர்ந்து பரபரப்பைஏற்படுத்தி வருகின்றன.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல ஏழைப் பெண்கள்,ஆண்களிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

ஆனந்த ராஜுக்கும், நடிகைகள் பலருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன.

பெங்களூரில் அவர் சென்று தங்கும் போதெல்லாம் 3 கன்னட நடிகைகள்ஆனந்தராஜை அவர்தங்கியிருந்த ஓயசிஸ் ஹோட்டலில் சென்று சந்திப்பார்களாம்.நடிகைகள் வந்தால் கிளம்பிப் போக பல மணி நேரம் ஆகுமாம்.

இப்படி நடிகைகளுடன் மட்டுமல்லாது பல அப்பாவிப் பெண்களையும் பணத்தால்அடித்து அனுபவித்துள்ளார் ஆனந்தராஜ். இப்படித்தான் ஆனந்தராஜிடம் சிக்கிக்கொண்டார் நாகர்கோவிலை சேர்ந்த ஆசிரியை தீபா.

பி.ஏ. படித்துள்ள தீபா, குமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் உள்ள தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும்,கன்னியாஸ்திரிஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

அந்த கன்னியாஸ்திரி ஆனந்தராஜுக்குப் பழக்கமானவர். தனது நிறுவனத்தில்பணியாற்ற ஒரு பெண் தேவை என்று அந்தக் கன்னியாஸ்திரியிடம் கூறியுள்ாளார்ஆனந்தராஜ்.

இதையடுத்து தீபாவை ஆனந்தராஜடம் அனுப்பியுள்ளார் கன்னியாஸ்திரி. தீபாவைபார்த்தவுடனே அவரது அழகில் மயங்கிவிட்ட ஆனந்தராஜ் அவரை தனது பி.ஏவாகவைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. தனக்கு ஆண்வாரிசு வேண்டும் என்பதற்காக தீபாவிடம் எனக்கு குழந்தைப் பெற்றுத் தர வேண்டும்என்று கூறி அவரை பணத்தால் நிர்பந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.

ஆனால் தீபாவுக்கோ பெண் குழந்தைதான் பிறந்தது. இருந்தாலும், தீபாவைவெறுக்காமல் அவரை தனது சின்னவீடாக வைத்துக் கொண்டார் ஆனந்தராஜ்.

இப்போது தீபா என்ன ஆனார் எனபது தெரியவில்லை. அவர் எங்கே இருக்கிறார்என்று தெரியாமல் தீபாவின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.

தீபாவின் தாயார் செல்வநாயகியும், தந்தை பர்னபாஸும் இது குறித்துக் கூறுகையில்,

மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் ஆனந்தராஜ் நடத்தி வந்த குழந்தைகள்காப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தார் தீபா. சம்பளத்தை மாதம்தோறும் தவறாமல்எங்களுக்கு அனுப்பி வைத்து விடுவார்.

பிஷப்புக்கும், உனக்கும் தவறான தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகிறதே என்றுமுன்பு அவரிடம் கேட்டபோது, அது உண்மை இல்லை. பொறாமையால் சிலர்இப்படித் தவறாக செய்தி பரப்புகினறனர் என்று கூறி விட்டார்.

பின்னர் நீண்ட நாள் ஊருக்கே வரவில்லை. இதையடுத்து பிஷப்புடன் சேர்ந்துஊருக்கு வந்தாள் தீபா. அப்போது நான் மலேசியாவில் இருக்கிறேன் என்று தீபாகூறினார். இதையடுத்து மீண்டும் நீண்ட நாட்களாக எங்களுடன் தீபா தொடர்பில்இல்லை.

தற்போது பிஷப் குறித்து தவறான தகவல்களாக வருகிறது. எப்போதுமே எனது மகள்பிஷப்புடன் தான் இருப்பார். இப்போது தீபா என்ன ஆனார் என்பது தெரியவில்லை.போலீசாரும் ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை என்றனர் தீபாவின் பெற்றோர்.

இதற்கிடையே, பிஷப்பின் மனைவி டெய்சி, முன் ஜாமீன் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் விசாரணை முடியாதநிலையில் டெய்சிக்கு முன் ஜாமீன் அளிக்கக் கூடாது என்று அரசுத் தரப்பில்வாதாடப்பட்டது.

இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந் நிலையில் ஆனந்தராஜிடம்பணம் கொடுத்து ஏமாந்த அதிர்ச்சியில் நெல்லை மாவட்டம் மேல் கடையநல்லூரைச்சேர்ந்த காண்டிராக்டர் சந்திரன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

ஆனந்தராஜின் மோசடிவேலைகள் விஸ்வரூபம் எடுத்து வருவதால் காவல்துறைஅதிர்ச்சி அடைந்துள்ளது. விரைவில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம்ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

பிஷப்பின் மோசடிகளுக்கு அவரது மனைவி டெய்சி, மகள்கள் ரூத்து, ஜாய், தாராமற்றும் மருமகன்கள் ஆகியோருக்கும் தொடர்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.ஆனால், இவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X