For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ்-புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்றோர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க முயன்ற 12க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் பல இடங்களில் நேற்று இரவில் சோதனைகள்நடத்தப்பட்டு 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பணம் மற்றும்விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை சப்ளை செய்ய இருந்தனர்.

இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சோதனைகள் நடந்து வருகின்றன என்றனர்.

ஏகே-47 ரக துப்பாக்கிகள், இலங்கை விமானப் படையிடம் உள்ள (இஸ்ரேல் வழங்கிய) கிபிர் ரக விமானங்களைசுட்டு வீழ்த்தும் ஏவுகணைகளை இவர்கள் வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான சண்டையால் யாழ்பாணத்தில் சிக்கியுள்ளஆயிரக்கணக்கான தமிழர்கள் உணவு, தண்ணீர் இன்றி பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழர்களை வீடுகளை விட்டு வெளியே செல்ல விடாமல் ராணுவம் தடுத்து வருகிறது. தமிழகத்துக்கு தப்பிச்சென்றாலும் தடுத்து நடுக் கடலில் வைத்து கைது செய்து வருகின்றனர்.

தமிழர்கள் வெளியேறிவிட்டால் தங்களுக்கு பாதுகாப்பில்லை, புலிகள் கண்மூடித்தனமாக தாக்குவார்கள் எனராணுவம் அஞ்சுகிறது. தமிழர்கள் அந்தப் பகுதியில் இருப்பது தங்களுக்கு கேடயமாக இருக்கும் என ராணுவம்கருதுவதால் தமிழர்களை வீடுகளில் இருக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இதை மீறிவோர் சுடப்படுகின்றனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்.

இந் நிலையில் மட்டக்களப்பில் ராணுவ முகாமின் மீது நேற்றிரவு புலிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையே இலங்கை மறுசீரமைப்புக்கு உதவும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வேநாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த அதிபர் ராஜபக்ஷே, புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் கூறிஅதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

சண்டையை நிறுத்தத் தயார் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்தால், அதை பரிசீலிக்கஅரசு தயாராக இருப்பதாக அதிபரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம் என புலிகள் உத்தரவாதம்அளிக்க வேண்டும் என அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலம் உணவு சப்ளை:

இதற்கிடையே உணவு உள்ளிட்ட அத்தியாசியப் பொருட்களை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் நிவாரணப் பணியாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.

ராணுவம், புலிகளின்முற்றுகை காரணமாக யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் இதர பகுதிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விமானம் அல்லது கப்பல் மூலமாகவே யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.பலாலி விமான தளத்தை விடுதலைப் புலிகள் சேதப்படுத்திவிட்டதால் விமானங்கள் தரை இறங்கமுடியாத நிலை உள்ளது.

இதனால் கடல் மார்க்கமாக மட்டுமே யாழ்ப்பாணத்தை அடைய முடியும். இருப்பினும் கட ல்புலிகள் கடுமையான போருக்கு காத்திருப்பதால்கடல்மார்ககமாகவும் இலங்கை அரசால் யாழ்ப்பாணத்தை அடைய முடியவில்லை.

இதனால் யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள 40,000 ராணுவ வீரர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் கொழும்பிலிருந்து கப்பல் மூலம் அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல சர்வதே செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்க கொடி கட்டப்பட்ட கப்பலில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வருகிறார்கள். இந்தக் கப்பல்யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளது. ஆனால் கன மழை காரணமாக பொருட்களை ஏற்றும் பணி தாமதமடைந்துள்ளது.

இதேபோல இன்னொரு கப்பலும் யாழ்ப்பாணம் செல்கிறது. காயமடைந்து தவித்தக் கொண்டிருக்கும் அப்பாவி பொது மக்களையும், ராணுவ வீரர்களையும்இந்தக் கப்பல் கொழும்புக்கு கொண்டு வரும்.

இக் கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற ஏராளமானோர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இருப்பினும் முதல்கட்டமாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களை மட்டுமே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துளளதாககூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு:

இந் நிலையில் நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் கடலில் குதித்துமீனவர்கள் உயிர் தப்பினர்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த குட்டியாணடி, ஏலமுத்து, சின்னையன், கவாஸ்கர் ஆகிய மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொணடிருந்தபோது அங்கு வந்த இலங்கைகடற்படையினர் மீனவர்களை கடலில் குதிக்க உத்தரவிட்டனர்.

அதன் பின்னர் படகை சரமாரியாக சுட்டனர். படகில் இருந்த மீன், வலைகள் ஆகியவற்றை கடற்படையினர் எடுத்துச் சென்று விட்டனர்.

பல மணி நேரம் நீந்தி பின்னர் மீனவர்கள் அந்த சேதமடைந்த படகிலேயே ஏறி கரை சேர்ந்தனர்.

போலீஸ் குழு கொழும்பு திரும்பியது:

இதற்கிடையே இந்தியாவில் பயிற்சி மேற்கொண்டிருந்த இலங்கை போலீஸ் குழு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பு திரும்பியது.

இலங்கை காவல்துறையைச் சேர்ந்த 44 போலீஸாருக்கு கோவை சி.ஆர்.பி.எப்.பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கோவை பயிற்சி முகாமிலிருந்து 44 போலீஸாரும் பெங்களூர் வழியாக போபாலுக்குஅழைத்துச் செல்லப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்து இவர்கள் சென்னைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர். 2 ஆம்னி பஸ்களில் விமான நிலையம் கொண்டு வரப்பட்ட இவர்கள் பின்னர்விமானம மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X