• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை துணை நகர திட்டம் கைவிடப்பட்டது!

By Staff
|

சென்னை:

பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அறிவுரையை ஏற்று சென்னைக்கு அருகேதுணைநகரம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே 30,000 ஏக்கர்பரப்பளவில் துணை நகரம்அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்ட சபையில்தெரிவித்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவின் கூட்டணிக் கட்சியான பாமககடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இத்திட்டத்தால் 44 கிராம மக்கள் கடும்பாதிப்படைவர். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. மீறி நிறைவேற்றமுயன்றால் கிராம மக்களைதிரட்டி நானே போராட்டத்தில் குதிப்பேன் என பாமகநிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு ஒருபடி மேலே போன சம்பந்தப்பட்ட கிராமக்கள் அடங்கிய செங்கல்பட்டுபாமக எம்.பியான ஏ.கே.மூர்த்தி, உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தை தடுப்போம்.திட்டம் தொடர்பாக கணக்கெடுக்க வரும் அதிகாரிகளை கட்டிப் போடுங்கள் என்றும்கிராம மக்களிடையே முழங்கினார்.

கூட்டணிக்கட்சியான பாமக இப்படி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் திமுக தரப்புஅதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் இத்திட்டத்திற்குஎதிராக களத்தில் இறங்கியது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாஇத்திட்டத்தை மட்டுமல்லாது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும்கடுமையாக விமர்சித்து அறிக்கை விட்டார்.

இந்த அறிக்கை சட்டசபையில் நேற்று பெரும் புயலைக் கிளப்பியது. இப்படி துணைநகரம் குறித்த சர்ச்சை வலுவடைந்த நிலையில் இத்திட்டம் கைவிடப்படுவதாகமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக தேர்தல்அறிக்கையிலும், நிதி நிலை அறிக்கையிலும் அறிவிக்கப்படடு, சென்னையை ஒட்டிதுணைநகர அமைப்பு உருவாக்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ்அறிவித்திருந்தேன்.இந்தத்திட்டம் கூட்டணிக் கட்சிகள், நல்லெண்ண அடிப்படையில் தெரிவித்திருந்தஅறிவுரையை சிந்தித்துப் பார்த்தும், சில சுய நல சக்திகள் திட்டமிட்டுள்ள பகிரங்கவன்முறை வெறியாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாகி விடக் கூடாது என்றமுன்னெச்சரிக்கை உணர்வுடனும் கைவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெ.

இதற்கிடையில் துணை நகரம் திட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றிருப்பது,மக்களுக்குகிடைத்த மாபெரும் வெற்றி என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலிலதா விடுத்துள்ள அறிக்கையில், ஒரு திட்டத்தை அறிவிக்கும்முன்பு அதன் சாதக, பாதகங்களை இனியாவது திமுக அரசு ஆராய்ந்து பார்த்து விட்டுஅதன் பின்னர் அதை அறிவிக்க வேண்டும். துணை நகர திட்ட விவகாரத்தில் இதைசெய்ய அரசு தவறி விட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக போருக்கு நான் தயார், எதையும் சந்திக்கத் தயார் என்றுகருணாநிதி சவால் விட்டிருந்தார். ஆனால் ஒரே நாளில் தனது முடிவிலிருந்து அவர்பின்வாங்கி விட்டார்.

பொது வாழ்க்கையில் என்னை அசிங்கப்படுத்த நினைக்கும் கருணாநிதியின் எந்தஅவச்சொல்லையும் பொதுமக்களின் நலனுக்காக தாங்கிக் கொள்ள நான் தயார். பொதுவாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று பெரியார் கற்றுக் கொடுத்த வழியில்எனது அரசியல் பயணம் இருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பாமக நிறுவனர் ராமதாஸ், விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதி மீண்டும்ஒருமுறை தனது அரசியல் நாகரீகத்தை நிரூபித்துக் காட்டி விட்டார். ஜனநாயகத்திற்குமதிப்பு கொடுத்து துணை நகரம் திட்டத்தை கைவிடடுள்ளார்.

இந்தப் பிரச்சினையை திசை திருப்பி அரசியல் லாபம் பெற முயன்றஜெயலலிதாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். துணைநகரம் வரப் போகிறதேஎன்று பயந்து கொண்டிருந்த கிராம மக்களின் சார்பாக முதல்வருக்கு எனதுநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதியின் இந்த செயலுக்காக அவருக்கு பாமக சார்பில் பாராட்டு விழாநடத்தப்படும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X