• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெ ஆட்சியில் கொட்டவி விட்ட கோப்பு-கருணாநிதி

By Staff
|

சென்னை:

ஜெயலலிதா ஆட்சியில் 550 ஏழைகளுக்கு நிலம் வழங்கும் ஆணை முடக்கம்செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த மே மாதம் 13ம் தேதி அன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டு ஆட்சிநடத்தத் தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொறு நாளும் நிர்வாகத்தில் மிகமுக்கியமான கோப்புகள்ை படித்து ஆணைகள் பிறப்பிக்கின்ற அவசியமான பணியைஆற்றி வருகிறேன்.

கடந்த ஐந்தாண்டு ஆட்சி புரிந்த அம்மையார் ஜெயலலிதா கோட்டையில் அமர்ந்துகோலோச்சிய விதம் எவ்வாறு இருந்தது என்பதற்கு தேங்கி கிடந்து, பொந்துகளில்இருந்து எட்டிப் பார்த்து, என்னிடம் சிக்கிக் கொண்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட தூசுபடிந்த கோப்புகள் அசைக்க முடியாத சான்றுகளாக அமைத்துள்ளன.

வணிக வரி மற்றும் பதிவுத் துறை சம்பந்தப்பட்ட ஒரு கோப்பு. டாக்டர் அம்பேத்கார்மக்கள் சங்கம் சார்பாக ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த 550 நிலமற்ற ஏழைவிவசாயித் தொழிலாளர்களுக்கு மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, நன்னிலம்வட்டங்களில் உள்ள 564.67 ஏக்கர் நிலங்களை ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் என்றதிட்டத்தின் கீழ் வழங்கி அதற்கான கொடை ஆவணங்களை பதிவு செய்யும்போதுமுத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்துக்கு விலக்களிக்குமாறு கோரப்பட்டது.

அந்தக் கோரிக்கை திமுக ஆட்சியில் 29.9.1998 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.அதன் பின்னர் 12.3.2001ல் திமுக ஆட்சி மாறுவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்புஅம்பேத்கர் மக்கள் சங்கம், தனது முதல் கோரிக்கையையொட்டி மற்றொருகோரிக்கையை வைத்தது.

அதாவது அந்த நிலங்களை விற்பனை ஆவணங்கள் மூலமாக வழங்கஉத்தேசித்துள்ளதாகவும், எனவே அரசின் ஆணையில் கொடை ஆவணம் என்றுஇருப்பதற்கு பதிலாக விற்பனை ஆவணம் என்று திருத்தம் செய்து அரசாணைவெளியிட வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை.

அந்தக் கோரிக்கையை நாகை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார். அதற்கிடையே 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாறிவிட்டது. அம்மையார் தலைமையில் அதிமுக ஆட்சிக்கு பொறுப்புக்குவந்துவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் கையெழுத்துக்காக கோப்பு 18.6.2003 அன்றுஅவரிடம் போய்ச் சேர்ந்துள்ளது. அம்மையாரின் செயலாளர் அந்தக் கோப்புஅமைசசரவையில் வைக்கப்படலாமா என்று அதிலே எழுதி அதற்கான பதிலைமீண்டும் சுற்றுக்கு அனுப்புமாறு தெரிவித்து, கோப்பினை துறைக்கே திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார்.

கோப்பு மீண்டும் ஊர்வலமாக அனுப்பப் பெற்று 25.6.03 அன்று தொடங்கி, 16.11.04வரையில் பழனிமுருகன் பரமசிவன் பார்வதியைச் சுற்றிவர மயில் வாகனத்தில்பறந்தான் என்பார்களே, அது போலப் பயணம் செய்து. ஆக மொத்தம் அந்தக் கோப்புஒரு வருடம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதல்வர் அலுவலகத்தை மீண்டும் எட்டிப்பார்த்துள்ளது.

முதல்வரின் கையெழுத்துக்காக தவியாய்த் தவிக்கிறது. கையெழுத்தாவது, கால்எழுத்தாவது, அதன் தலையெழுத்தை மாற்றி எழுத முடியுமா? இத்தனைக்கும் முடிவுசெய்ய வேண்டியது பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை.

ஏற்கனவே அம்பேத்கர் மக்கள் சங்கத்தினர் 550 ஏழை விவசாயிகளுக்குகுடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதை பதிவு செய்யும் போது கொடைஆவணம் என்பதை விற்பனை ஆவணம் என்று திருத்தம் செய்து ஆணை பிறப்பிக்கவேண்டும் என்ற இநத கோரிக்கைக்கு தான் இத்தனை ஆண்டு அம்மையார் ஆட்சியில்அந்த கோப்புக்கு இந்தப் பாடு.

அப்படியும் அம்மையாரின் அருள்மிகு ஒப்புதல் கையெழுத்து அந்த அரசாணைக்குஅந்த கோப்பில் கிடைத்தா? இல்லவே இல்லை. கோப்பு பாவம் கொட்டவி விட்டுகொண்டிருந்தது. அம்மையார் கோட்டையைக் காலி செய்யும் வரையில் கொட்டக்கொட்ட முழித்துக் கொண்டிருந்து விட்டு அப்பாடா ஐந்தாண்டு முடிந்து விட்டது. இனிநமக்கு அபயம் கொடுப்பார் யார்? என்று தேடியலுத்து நேற்று 11.9.2006 அன்றுஎன்னிடம் வந்து சேர்ந்தது.

நான் அதிலே கையெழுத்து போட்டு விட்டுத்தான் இன்று திருவாரூர் நிகழ்ச்சிக்குப்புறப்பட்டேன் என கருணாநிதி கூறியுள்ளார்.

திருவாரூர் பயணம்:

விவசாயிகள் நல வாரியத்தை மீண்டும் அமைத்ததற்காக கருணாநிதிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடக்கிறது. அதில்பங்கேற்க இன்று காலை கார் மூலம் கருணாநிதி திருவாரூர் சென்றார். வழியில் பாண்டிச்சேரியில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த அவரை அம் மாநில முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.

நாளை காலை கருணாநிதி சென்னை திரும்புவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X