For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து, வலிகள் சுமக்கும் யாழ்பாணம்

By Staff
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்:

உணவுக்கும், எரிபொருளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவினாலும் கூட ராணுவத்தின் முற்றுகையில் இருக்கும்யாழ்ப்பாணத்தில் நிலைமை மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் மோதல் மூண்டது. திரிகோணமலையில் ஆரம்பித்த இந்த மோதல் யாழ்ப்பாணத்திற்கும் நீண்டது.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் முற்றுகையிட்ட விடுதலைப் புலிகள், யாழ் குடாவுக்கும், நாட்டின் பிற பகுதிக்குமானதொடர்புச் சாலையை துண்டித்தனர். மேலும் பலாலி விமான தளத்தையும் தாக்கி சேதப்படுத்தினர்.

இதனால் யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம், உணவு,குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும்மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

மேலும், யாழ்ப்பாணத்திற்கு நிலை கொண்டுள்ள 40,000 ராணுவ வீரர்களின் கதியும் கேள்விக்குறியானது. இந்தநிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முயற்சியால், யாழ்ப்பாணத்தில் தவித்துக் கொண்டிருக்கும்வெளிநாட்டினர், படிப்புக்காக வந்தோர், யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தோரை மட்டும் மீட்க புலிகள் அனுமதிஅளித்தனர்.

இதைத் தொடர்ந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ளோர் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.இந்த சண்டை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

பல வாரமாக முற்றுகையில் இருக்கும் யாழ்ப்பாணத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை. நாட்டின் தெற்குப்பகுதிக்குச் செல்லும் சாலை இன்னும் சரியாகவில்லை. விமானப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. கப்பல்போக்குவரத்தையும் தொடங்க முடியாத நிலை உள்ளது.

இருப்பினும் தற்போது முற்றுகைக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள தொடங்கியுள்ளனர் யாழ் மக்கள்.யாழ்ப்பாணத்தில் தற்போது நிலைமை சகஜமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைவாசிதான்கடுமையாக உள்ளது.உணவு, பெட்ரோல், டீசலுக்கு அங்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மிகக் குறைந்த அளவிலேயே இவைஇருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வாழைப்பழம், அரிசி போன்றவைதான் சற்று சகாய விலைக்குக்கிடைக்கிறதாம்.

சர்க்கரை, பால் பவுடர், பருப்பு போன்றவை கிடைப்பதில்லை அல்லது மிகவும் குறைவாக கிடைக்கிறது.பெட்ரோல், டீசல் சரியாக கிடைக்காததால் பெரும்பாலானவர்கள் சைக்கிளையே போக்குவரத்துக்குப்பயன்படுத்துகிறார்கள். சிலர் மண்ணெண்ணையை பயன்படுத்தி மூன்று சக்கர ரிக்ஷாக்களை ஓட்டுகின்றனர்.

தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரையாரும் வெளியே நடமாட முடியாது. இரவு முழுவதும் ராணுவ வாகனங்களின் சத்தமும், டேங்குகளின்உறுமலும் தான் கேட்கிறதாம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த டச்சு கோட்டையைத்தான் தற்காலிகஹெலிபேடாக ராணுவம் பயன்படுத்துகிறது. இருப்பினும் கோட்டையை முழுமையாக பயன்படுத்த முடியாதநிலை நிலவுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகள் இங்கே புதைத்து வைத்த கண்ணி வெடிகள்இன்னும் அகற்றப்படாமல் உள்ளதே இதற்குக் காரணம்.

அமைதி திரும்புவது ஒன்றுதான் எங்களது அவதிகளுக்கு முடிவு கட்டும். திரும்பும் என நம்புகிறோம் எனநம்பிக்கை தெரிவிக்கிறார் 22 வயதான மாணவியான சங்கீதா ஜெயரத்தினம். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்து வரும் இவர் அங்கிருந்து கப்பல் மூலம் மட்டக்களப்பு செல்ல காத்திருந்தார்.

நான் மருத்துவம் படிக்கிறேன். என்னால் தேர்வுகளை முழுமையாக முடிக்க முடியவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கினால் மட்டுமே எங்களால் படிப்பை தொடர முடியும் என்கிறார் சங்கீதா.

யாழ்ப்பாணத்தில் இன்னும் தொலைபேசி இணைப்புகள் முழுமையாக சரியாகவில்லை. ராணுவம் தொலைபேசிஇணைப்புகளை முழுமையாக கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல மின்சாரமும் சரிவரவினியோகிக்கப்படுவதில்லை.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு ஊழியரான கந்தையா கணேஷ் கூறுகையில், நிலைமைசீரடைந்து வருகிறது. ஆனால் முழுமையாக சீரடைந்து விட்டதாக கூற முடியாது. இன்னும் 20 நாட்களுக்குத்தேவையான பொருட்கள்தான் எங்கள் கைவசம் உள்ளது. அதுவும் அரிசி, சர்க்கரை, கோதுமை மாவு, பருப்பு,பால் பவுடர் போன்றவை மட்டும்தான் உள்ளது.

சில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்கின்றனர்.சர்க்கரையின் விலை 300 மடங்கு அதிகரித்து விட்டது. நிலைமை மிகவும் கடினமாகி வருகிறது என்கிறார்கந்தையாக கணேஷ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X