For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் கரையைக் கடந்தது ஓகினி புயல்!

By Staff
Google Oneindia Tamil News

ஓங்கோல்:தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ஓகினி புயல், ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே இன்று பிற்பகல் கரையைக்கடந்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் தமிழக கடலோரப் பகுதிகளை நேற்று முன்தினம்நெருங்கி வந்தது. இதனால் சென்னை, நாகை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலை இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இது புயலாகமாறி இன்று காலை ஆந்திராவின் ஓங்கோல் மாவட்டத்திற்கு அருகே 50 கிலோமீட்டர் தொலைவில் கடலில் நிலைகொண்டிருந்தது. இப்புயலுக்கு ஓகினி என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்தப் புயல் இன்று பிற்பகல் மேலும் வலுவடைந்து ஓங்கோலுக்கும், பாபட்லா என்ற இடத்திற்கும் இடையேகரையைக் கடந்தது. அப்போது பலத்த சூறாவளிக் காற்றும், மிக பலத்த மழையும் பெய்தது.

புயல் கரையைக் கடந்ததன் காரணமாக குண்டூர், பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்துவருகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது.

ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்லும் ரயில்கள் மாற்றுவழியில் சென்று கொண்டுள்ளன.ஆந்திராவில் புயல் கரையைக் கடந்ததன் எதிரொலியாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பெய்து வரும் கன மழைக்கு குண்டூர் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிக் காற்றில்சிக்கி ஹெளரா-செகந்திரபாத் இடையிலான பலக்நாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள்ஸ்ரீபுரம்-பெடக்குரபாடு ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டது.

ரயில் தடம்புரண்டபோதிலும் எந்தவித உயிர்ச் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டூர், பிரகாசம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.

நாகை மீனவர்கள் 160 பேர் மீட்பு:

இதற்கிடையே நாகை அருகே காணாமல் போன 160க்கும் மேற்பட்ட மீனவர்களை கடலோரக் காவல் படைவீரர்கள் மீட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 66 படகுகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச்சென்றனர். இந்த படகுகள் அனைத்தும் திரும்ப கரைக்கு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் உத்தரவின் பேரில் மீனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

3 கடலோரக் காவல் படை மற்றும் கப்பல் படை படகுகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தத் தேடுதலில்கடலில் தத்தளித்துக் கொண்டிருந் 64 படகுகள் மீட்கப்பட்டன. அதில் இருந்த 160க்கும் மேற்பட்டோர் பத்திரமாகமீட்கப்பட்டனர்.

இதேபோல ஒரு படகு கடலில் மூழ்கிக் கிடந்தது. அதில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்தவண்ணம் இருந்தனர்.அவர்களையும் மீட்புப் படையினர் மீட்டனர். ஒரு படகு மட்டுமே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதற்கிடையில் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழகம்முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின்மேற்கு மத்திய பகுதியில் இந்த புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து நகரும் வாய்ப்பு இருப்பதால் தமிழகம் முழுவதும் இடியுடன் கூடியகன மழை பெய்யம் என்றும் அது எச்சரித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தைசமாளிக்க முழு வீச்சில் தயாராகா இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கன மழைக்கு இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், கடலூர் மாவட்ட விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 2000 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 5000 ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய முடியாத அளவுக்குதண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை இரவு ஒரே நாளில் 19 செமீ மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகள் பலவற்றில் மழை நீர் புகுந்து வெள்ளக் காடாககாணப்படுகிறது. இதையடுத்து அடுத்தடுத்து வரும் மழையால் சென்னை நகரின் தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீரிகளில் நீர் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். குடியிருப்புகள்பாதிக்கப்படாத வகையில், இந்த நீர் நிலைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் கடந்த ஆண்டைப் போல கோட்டூர்புரம், சின்னமலை உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்காதபடி காக்கப்படும் என்றார். கடந்த ஆண்டுசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கோட்டூர்புரத்தையே மூழ்கடித்தது நினைவிருக்கலாம்.

சனிக்கிழமை இரவு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் இன்னும் மீண்டபாடில்லை. பல பகுதிகளில் தண்ணீர் முட்டியளவுக்கு தேங்கிக்கிடக்கிறது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. காவல் நிலையங்களும் இதில் தப்பவில்லை. ஓட்டேரி, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வேளச்சேரி, வியாசர்பாடி, கன்னிகாபுரம், அடையாறு, கிண்டி, திருவான்மியூர், கோயம்பேடு, தி.நகர், தாம்பரம், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர்தேங்கிக் கிடக்கிறது.

இதற்கிடையே, சென்னை மற்றும் நாகை மாவட்டங்கள்தான் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் கூடுதல் நிவாரண முகாம்களை திறக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிமீட்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு:

இதற்கிடையே கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் மொத்த நீர் இருப்பு 47.5அடியாகும். தற்போதைய நீர் மட்டம் 43.3 அடியாக உள்ளது. இதையடுத்து ஏரியைச் சுற்றிலும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு கரைகள்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X