For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாறனுக்கு ஏன் சிலை? டி.ஆர்.பாலு விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மக்களவை சபாநாயகர் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள்அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கரண் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் ஒப்புதலைப்பெற்றுத்தான் முரசொலி மாறனின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில்அமைக்கப்படவுள்ளது என்று மத்திய நிெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவிளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடஇல்லாமல், முரசொலி மாறனின் நினைவு நாள் வருவதை (இன்று) தெரிந்து கொண்டு,நாள் பார்த்து ஜெயலலிதா மாறனுக்கு எதிராக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உள் வளாகத்திலோ, வெளி வளாகத்திலோ, யார் யார் சிலைகளைவைக்கலாம் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமரிடத்திலேயோ, ஆளும்கட்சியின் தலைவரான சோனியா காந்தியிடமோ இல்லை.

மாறாக நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைப்பதை தீர்மானிக்க ஒரு குழு உள்ளது.இந்தக் குழுவில் தலைவராக மக்களவை சபாநாயகர் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர்அத்வானி, ஜஸ்வந்த் சிங், கரண் சிங், பி.சி.அலெக்சாண்டர் ஆகிய எம்.பிக்கள்இக்குழுவில் உள்ளனர்.

இவர்கள்தான் யாருடைய சிலையை வைக்கலாம் எனபதை முடிவு செய்வார்கள்.அவர்கள்தான் திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், 35 ஆண்டுகாலம்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்தவரும்,

மிகச் சிறந்த பாராளுமன்றவாதியாக விளங்கியவரும், பொருளாதார நிபுணரும்,சிறந்த இலக்கியவாதியும், எழுத்தாளரும், சமூக நீதி காவலராக விளங்கியவரும்,மாநில சுயாட்சிக்காக வாதாடியவரும்;

அரசியல் சட்டப் பிரிவு 356ஐ நீக்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானத்தைநாடாளுமன்றத்தில் கொண்டு வந்தவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டமக்களுக்காக குரல் கொடுத்தவரும்,

வர்த்தக அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா போன்ற வல்லரசுகளே முயற்சிசெய்தும் அதற்கும் இணங்காமல் வளரும் நாடுகளின் பொருளாதார பாதுகாப்புக்காகஇரவு பகலாக வாதாடி, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறை சாற்றிதனக்கென தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர் முரசொலி மாறன்.

அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதியதைத்தொடர்ந்து அவர் தலைமையிலான நிாடாளுமன்ற சிலை வைப்புக் குழு கூடிமாறனுக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு சிலை வைப்பதைதடுத்து விட்டார் என்று கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆரு.க்கு சிலை வைக்கக் கூடாது என்றோ,மாறனுக்கு சிலை வைக்க வேண்டும் என்றோ கருணாநிதி, மத்திய அரசுக்கோ,சோனியா காந்திகோ கடிதம் எழுதி வற்புறுத்தினார் என்பதை ஜெயலலிதாவால்நிரூபிக்க முடியுமா? அதனை ஜெயலலிதா நிரூபிக்க முடியாவிட்டால் அரசியலைவிட்டு ஓடத் தயாரா?

மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் கருணாநிதி, பதவியேற்ற தினம் முதல்தினமொரு திட்டமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம்ஜெயலலிதவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முரசொலி மாறன் தகுதியைப் பற்றி யார் ஜெயலலிதாவின் சான்றிதழைக் கேட்டது?முரசொலி மாறன் எத்தனை முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,எத்தனை முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார், எத்தனை வெளிநாடுகளுக்குச்சென்று இந்தியாவின் புகழை உயர்த்தியுள்ளார், அதைப் பற்றி எல்லாம்ஜெயலலிதாவுக்கு விவரமாவது தெரியுமா?

எதுவும் தெரியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவருக்கு சிலை வைக்கலாம் என்றாகேட்பது என்று கூறியுள்ளார் பாலு.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதியிடம், நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் சிலையை வைக்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டபோது,

முரசொலி மாறன் கற்பு கெட்டவர் என்று கற்புக்கரசி ஜெயலலிதா கூறியிருக்கிறார் என்று மிகக் கடுமையாகக் கூறினார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X