For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரூர் ஏரியில் 10,000 ஆக்கிரமிப்பு வீடுகள்: இரவு பகலாக இடிப்பு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

போரூர்:சென்னையில் 330 ஏக்கப் பரப்பளவு கொண்ட போரூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10,000க்கும் மேற்பட்டவீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

இப்போது வெறும் 100 ஏக்கராக சுருங்கிவிட்ட போரூர் ஏரியை பல காலமாகவே பொது மக்களும்அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்து வந்தனர். பல ரியல் எஸ்டேட் கும்பல்கள் இந்த ஏரி நிலத்தை பட்டா போட்டும்விற்றுவிட்டன.

இதனால் ஏரியை சுற்றிலும், ஏரிக்குள்ளும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முளைத்தன. கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வீடுகள் இருந்து வருகின்றன. மேலும் ஏரிக்குள்ளேயே அம்பேத்கர் நகர்,எம்ஜிஆர் நகர், சமத்துவ நகர், செல்வகணபதி நகர், அண்ணா நகர், விவேகானந்தர் நகர், பெரியார் நகர் எனஏகப்பட்ட நகர்களும் உருவாகிவிட்டன.

இவற்றுக்கு சாலை, மின்சார, குடிநீர் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளேயே கோவில்கள்,பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகள் கூட கட்டப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளாக இந்த மெகாஆக்கிரமிப்பு கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வந்தது.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாகவே கன மழையால் போரூர் ஏரி நிரம்பி வருகிறது. ஏரியை மூடி வீடுகள்கட்டப்பட்டதால் ஏரியில் இடமில்லாமல் சுற்றுப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து வருகிறது.

இதையடுத்து ஏரிக்குள் வீடு கட்டியவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு இரண்டுமுறை நோட்டீஸ் தரப்பட்டது. ஆனாலும் யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

இந் நிலையில் ஏரியில் உள்ள வீடுகளை அகற்றும் பணி நேற்று முன் தினம் தொடங்கியது. இன்றும் 3வது நாளாகஇந்தப் பணி நடந்து வருகிறது. 40க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், புல்டோசர்கள், நூற்றுக்காணதொழிலாளர்கள் உதவியோடு இந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதியில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அங்குபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 வீடுகளை இடித்து முடிக்க 15 நாட்கள் வரை ஆகும் என்றுதெரிகிறது.

வீடுகள் இடிபடுவதைக் கண்டு பொங்கும் அழுகையும், ஆத்திரமுமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.எங்களுக்கு இந்த இடத்தை 10 வருசத்துக்கு முன்னாடி ரூ. 25,000க்கு வித்தாங்க அய்யா, இதோ பட்டா, இதோரேசன் கார்டு, இதே மின்சார இணைப்புக்கான ரசீது என்று அதிகாரிகளிடம் காட்டியபடி வீட்டை இடிக்காதீங்கஎன்று காலில் விழுந்து பெண்களும் ஆண்களும் கதறியழுது வருகின்றனர்.

ஆனால், இதெல்லாம் செல்லாது, நீதிமன்ற உத்தரவுப்படி இடிக்கிறோம் என்று அதிகாரிகள் கூறிவிட்டு இடிப்பைதொடர்ந்து கொண்டுள்ளனர்.

புல்டோசர்களின் சத்தங்களையே அமுக்கிவிடுகிறது தங்களது வீடுகள் இடிபடுவதைப் பார்த்து கதறுவோரின்குரல்கள்.

இதில் பெரும்பாலானவர்கள் இது போலி பத்திரம் மூலம் விற்கப்பட்ட ஏரி நிலம் என்பதே தெரியாமல் வாங்கிஏமாந்தவர்கள் என்பது தான் சோகம்.

இடிக்கப்படும் வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது அரசு.இவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்ட இடத்துக்கான டோக்கன்கள் தரப்பட்டு வருகின்றன. அகதிகள் மாதிரிவந்து டோக்கன்களை வாங்கிக் கொண்டு இடிபடும் வீட்டை பார்த்து அழுதபடி சென்று வருகின்றனர் இந்தமக்கள்.

இவர்களுக்கு நிலத்தை விற்ற கரை வேட்டிக் கும்பல்கள், ரியல் எஸ்டேட் தாதாக்கள் ஆகியோர் மீது யார்நடவடிக்கை எடுப்பது?, பட்டா வழங்கிய அதிகாரிகள், ஏரி நிலம் என்று தெரிந்தும் மின்சார இணைப்பு, குடிநீர்இணைப்பு வழங்கிய அதிகாரிகள், ரோடு போட்ட அதிகாரிகள், இதில் கமிஷன் அடித்த லோக்கல் அரசியல்புள்ளிகள் மீது எப்போது நடவடிக்கை வரும்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X